இதுவரை 393 படங்களில் நடித்தார் மம்முட்டி


மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி 65–வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 1970–ல் சினிமாவுக்கு வந்த இவர் பிரபல மலையாள இயக்குனர் எம்.பி. வாசுதேவ நாயகர் ஆதரவால் திரை உலகில் உறுதியான இடத்தை பிடித்தார்.

கிடைத்த வேடத்தை சிறப்பாக செய்து மலையாள ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இரண்டு ஹீரோக்கள் படம் என்றாலும், மறுக்காமல் நடித்தார். அவரது 45 ஆண்டு திரை உலக வாழ்க்கையில் நடிக்காத பாத்திரங்கள் இல்லை.

தமிழிலும் ரஜினி உள்பட பல ஹீரோக்களுடன் நடித்து இருக்கிறார். பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். மம்முட்டி இதுவரை தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடியது இல்லை. 65–வது பிறந்தநாளின் போது கொச்சியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அந்த பள்ளி குழந்தைகள் ஆயிரம் பேர் சேர்ந்த மம்முட்டியின் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தனர்.

அவர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய அவர் சிறிது நேரம் மாணவ – மாணவிகளுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு உடனே படப்பிடிப்புக்கு சென்று விட்டார். இதுவரை 393 படங்களில் நடித்துள்ள மம்முட்டி, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டே 400 படங்களை தொட்டு விடுவார் என்று கூறப்படுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *