எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேர்வு செய்யும் பொறுப்பை பெற்றோரிடமே விட்டு விட்டேன் | நயன்தாரா


நயன்தாரா ஏற்கனவே சிம்புவை காதலித்தார். பிறகு அது தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இரண்டாவதாக பிரபு தேவாவை விரும்பினார். அவருக்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கும் மாறினார். திருமண ஏற்பாடுகளும் நடந்தது. ஆனால் அதுவும் கடைசி நேரத்தில் தோல்வியானது. இருவரும் பிரிந்து விட்டார்கள்.

தற்போது நயன்தாரா மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். நயன்தாரா கைவசம் ‘இது நம்ம ஆளு’, ‘மாயா’, ‘தனிஒருவன்’, ‘மாஸ்’, ‘நானும் ரவுடி தான்’ என ஐந்து படங்கள் உள்ளன. மலையாள படமொன்றிலும் நடிக்கிறார்.

நயன்தாராவுக்கு 30 வயது ஆகிறது. எனவே அவரது திருமணம் எப்போது நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் திருமணம் குறித்து அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:–

என் பெற்றோர் என்னை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார்கள். என் உணர்வுகள் பற்றியும் விருப்பங்கள் பற்றியும் அவர்களுக்கு தான் அதிகம் தெரியும். அவர்களை நான் நம்புகிறேன். எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையையும் அவர்களே தேர்வு செய்வார்கள். நல்ல மாப்பிள்ளை வேண்டும். அந்த பொறுப்பை பெற்றோரிடமே விட்டு விட்டேன். அவர்கள் முடிவு செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வேன்.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *