படத்தை பார்க்க குடும்பத்தினருக்கு தடை போட்ட ஜி.வி.பிரகாஷ் | “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா”


ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷுடன் ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ சான்றிதழ் வாங்கிய இப்படம் வசூலில் சாதனை படைத்தது. எதிர்மறையான கருத்துகளை இப்படம் பெற்றாலும் இளைஞர்களிடம் வரவேற்கப்பட்டு வருகிறது.

இப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் நடித்ததால் எனது மதிப்பு குறையவில்லை. நான் தொடர்ந்து இது மாதிரிப் படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். இது முற்றிலும் இளைஞர்களுக்கான படம். அதனால் தான் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து படத்தை விளம்பரப்படுத்தினோம்” என்று கூறினார். உங்கள் குடும்பத்தினர் மற்றும் மனைவி ஆகியோர் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தைப் பார்த்தார்களா? என்ற கேள்விக்கு நான் அவர்களை பார்க்க விடவில்லை என கூறியுள்ளார்.

உங்களை அடுத்த சிவகார்த்திகேயன் என அழைப்பது குறித்து கேட்டதற்கு, ‘அது நல்ல விஷயம் தான். எனினும் எதையும் நான் பொருட்படுத்தமாட்டேன். சினிமா ஒரு வியாபாரம். என் மேல் நம்பிக்கையுடன் பணம் போடும்போது அதை லாபமாக்கித் தரவேண்டியதுதான் என் வேலை’ எனக் கூறியுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *