கன்னட நடிகர்களின் உடலை ஏரியில் 2-வது நாளாக தேடும் பணி


பிரபல கன்னட நடிகர் துனியா விஜய். இவர் தற்போது ‘மாஸ்-தி-குடி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சுந்தர் பி.கவுத்ரு தயாரிக்க இயக்குனர் நாகசேகர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் வில்லன் நடிகர்களாக உதய், அனில் நடித்து வந்தனர்.

படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சிகள் கர்நாடகாவின் ராமநகர் மாவட்டம் திப்பகொண்டன ஹள்ளி ஏரிப்பகுதியில் நேற்று நடந்தது.அப்போது ஹெலிகாப் டரில் பறந்தபடி நடிகர் துனியா விஜய் வில்லன் நடிகர்கள் உதய், அனிலுடன் சண்டைப்போட்டபடி ஏரிக்குள் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

அதன்படி ஹெலிகாப்டர் 50 அடி உயரத்தில் இருந்து முதலில் உதய், அனில் இருவரும் ஏரியில் குதித்தனர். அதன் பின் துனியா விஜய் குதித்தார்.3 பேரும் நீச்சல் அடித்த படி கரைக்கு வர முயன்ற னர். ஆனால் உதய், அனில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். உடனே அவர் களை மீட்க சென்ற டீசல் படகில் என்ஜின் பழுதாகி விட்டது. இதனால் அவர் களை மீட்க செல்ல முடிய வில்லை.

நடிகர் துனியா விஜய் மட்டும் நீச்சல் அடித்தபடி கரைக்கு வந்து கொண்டிருந்தார். அவரை பரிசல் மூலம் மீட்டனர்.இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ரப்பர் படகில் ஏரியின் நடுப் பகுதிக்கு சென்று தேடினர்.

உதய், அனில் குதித்த ஏரியின் நடுப்பகுதி 20 அடி ஆழம் கொண்டது. இதனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருப்பது தெரிய வந்தது.உயிர் தப்பிய நடிகர் துனியா விஜய் பாதுகாப்பு கவச உடையை சட்டைக்குள் அணிந்து குதித்துள்ளார். ஆனால் மற்ற 2 நடிகர்கள் பாதுகாப்பு கவச உடையை அணிய வில்லை என்று தெரிகிறது. இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

நேற்று இரவு 8 மணி வரை இருவரின் உடல்கள் கிடைக்கவில்லை. இருட்டி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக நடிகர்களின் உடல்களை தேடும் பணி நடந்தது.

இதில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட் டனர். படகுகளில் சென்று ஏரி முழுவதும் தேடி வருகிறார்கள்.சில நாட்களுக்கு முன்பே திப்பகொண்டனஹள்ளி ஏரியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கி இருந்தனர். அதன் பின் அதனை ரத்து செய்து விட்டு மீண்டும் அனுமதி வாங்கி நேற்று படப்பிடிப்பு நடத்தினர். விபத்து நடந்த ஏரி பெங்களூருக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஏரியாக உள்ளது.

இது குறித்து பெங்களூர் குடிநீர் வாரிய நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “ஏரியை ஒட்டிய பகுதி களிலும், பூங்கா பகுதிகளிலும் மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் ஹெலிகாப்டரை பயன்படுத்துவது தெரியாது” என்று கூறி உள்ளது.

இதற்கிடையே தாவர கெரே போலீசார் படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் பி.கவுத்ரு, இயக்குனர் நாகசேகர், உதவி இயக்குனர் ரவிசர்மா, மேலாளர் பரத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பாதுகாப்பு வசதி முறையாக செய்யவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட் டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *