‘களத்தூர் கிராமம்’ | இளையராஜா இசை அமைக்கும் 1001-வது படம்


பாராதிராஜா இயக்கத்தில், ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 1977ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’.

இப்படத்தை தயாரித்திருப்பவர் ராஜ்கண்ணு. தற்போது இவரது மகன் மிதுன் குமார் ‘களத்தூர் கிராமம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘தடையற தாக்க’ படத்தில் இயக்குனர் மகிழ்திருமேனியிடம், உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் மிதுன். மேலும் ’16 வயதினிலே’ படத்தின் டிஜிட்டல் பதிப்பின் இயக்குனராகவும் பணியாற்றினார்.

‘களத்தூர் கிராமம்’ படத்தை அறிமுகம் சரண்.கே அத்வைதன் இயக்குகிறார். இவர் ‘சின்னதாய்’ புகழ் கணேஷ் ராஜியிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது இளையராஜா இசை அமைக்கும் 1001-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜமீன் ஜாம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் நடத்தவுள்ளனர். இப்படத்தை ‘ஏ.ஆர்.மூவி பாரடைஸ்’ நிறுவனம் சார்பில் சீனுராஜ் தயாரிக்க, அவருடன் இணை தயாரிப்பாளராக மிதுன் குமாரின் தந்தை ராஜ்கண்ணுவும் பொறுப்பேற்றுள்ளார். படத்தில் ஆடுகளம் கிஷோர், ஏக்னா செட்டி, ரஜினி மகா தேவய்யா, தருண் சத்ரியா மற்றும் முன்னணி கன்னட நடிகர்கள் ஆகியோரும் நடிக்கிறார்கள்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *