ரூ. 41 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பங்களா | அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதிகள்


அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதிகள் அமிதாப்பச்சனுடன் வசித்து வருகின்றனர். திருமணத்துக்கு பிறகு படங்களில நடிப்பது தொடர்பாக ஐஸ்வர்யாராய்க்கும் மாமியார் ஜெயாபச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் நடிக்க வருவதை தள்ளிப்போட்டு வந்தார் ஐஸ்வர்யாராய்.

தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்திருப்பதுடன் ‘ஜஸ்பா’ பட ஷூட்டிங்கிலும் பங்கேற்றார். அபிஷேக்-ஐஸ்வர்யாராய் இருவரும் தனிக்குடித்தனம் செல்லவிருப்பதாக நீண்ட நாட்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தது. இந்நிலையில், அபிஷேக் பச்சன் மும்பையில் ரூ. 41 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பங்களா வாங்கி இருக்கிறார். மும்பையிலேயே 5 பெட் ரூம், ஹால் என அதிக பரப்பளவு உள்ள பங்களா இதுதான் என கூறப்படுகிறது. விரைவில் இந்த வீட்டுக்கு இருவரும் தனிக்குடித்தனம் செல்ல உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் வீடு நிலம் என ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய பாலிவுட் நடிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ரூ.70 கோடி மதிப்புள்ள நிலம் வாங்கி அதில் வீடு கட்டி வருகிறார் ஹிருத்திக் ரோஷன். சாஹித் கபூர், சயீப் அலிகான், இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்ட பல நடிகர்கள் நிலத்தில் முதலீடு செய்துள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *