நடிகை அசின் வட மாநல மருமகளாகிறார்


மலையாள அழகியான நடிகை அசின் வட மாநல மருமகளாகிறார். நடிகை அசீனுக்கும், டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் வருகிற 23–ந்தேதி திருமணம் நடக்கிறது. டெல்லியில் திருமணம், மும்பையில் வரவேற்பு விழா என்று திட்டமிட்டு உள்ள அசின் திருமண ஏற்பாடுகளை தனது வருங்கால கணவர் ராகுல் சர்மாவுடன் இணைந்து தீவிரமாக செய்து வருகிறார்.

சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது அசினுக்கு காதலர் ராகுல்சர்மா ரூ.6 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக அளித்தார். இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு நெருங்கிய நண்பர்களுக்கு ‘‘எங்கள் திருமணத்துக்காக உங்கள் 3 நாட்களை சேமித்து வையுங்கள்’’ என்ற பொருள் பட ’சேவ் யுவர் டே’ என்று அச்சிட்டு கார்டை வழங்கினார். இப்போது முறைப்படி திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உள்ளனர்.

டார்க் பிரவுன் கலரில் தங்க வண்ண டிசைன்களில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உள்ளது. இந்த அழைப்பிதழை திரையுலக நண்பர்களுக்கு அசின் தனது காதலனுடன் சேர்ந்து வழங்கி வருகிறார். முதல் அழைப்பிதழை காதலன் ராகுல்சர்மாவை அறிமுகப்படுத்திய நடிகர் அக்சய் குமாருக்கு நேரில் சென்று வழங்கினார்.

தமிழில் வெற்றிகரமாக ஓடிய கஜினியின் இந்தி ரீமேக் படத்தின் மூலம் இந்தி திரையுலகில் கால் பதித்தார் அசின். பின்னர் அக்சய்குமாரின் ஹவுஸ்புல்–2, கிலாடி 786 ஆகிய படத்தின் மூலம் பிரபலமானார். அக்சய்குமார் மூலமே ராகுல்சர்மாவின் அறிமுகம் அசினுக்கு கிடைத்தது. முதலில் அதிகம் பேசிக் கொள்ளாமல் இருந்த இருவரும் ஒரு கூட்டத்தில் நண்பர்களாக மாறி பின்னர் காதல் வளையத்தில் சிக்கி கொண்டனர். அவர்களது காதல் இப்போது திருமணம் வரை சென்று விட்டது.

தங்களை வாழ்க்கையில் இணைய வைத்த அக்சய் குமாரை கவுரப்படுத்த அவருக்கு முதல் திருமணப் பத்திரிக்கையை இருவரும் கொடுத்தனர். இது பற்றி அக்சய்குமார் கூறும்போது, ‘‘எனக்கு முதல் பத்திரிக்கை கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் அவர்களை அறிமுகம் செய்து வைத்தேனே தவிர… திருமண ஜோடியாக்கிய வேலையை செய்யவில்லை’’ வாழ் நாள் முழுவதும் இருவரும் சந்தோசமாக இருக்க வாழ்த்துகிறேன்’’ என்றார்.

திருமண உடையை மும்பையில் உள்ள பிரபல டிசைனர் சப்யாசாட்டியிடம் இருவரும் ஆர்டர் கொடுத்து உள்ளனர். இவர் இந்தி நடிகைகளுக்கு டிசைன் செய்து கொடுப்பவர் என்பது குறிப்பிடத்துக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *