போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனோபாலாவுக்கு எதிராக புகார்


சென்னை நங்க நல்லூரைச் சேர்ந்தவர் எம்.ஆர்.சினிசரவணன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் நடிகராகவும் உள்ளார். சென்னை  போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று அவர் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட நடிகருமான மனோபாலா சக நடிகர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் அ.தி.மு.க.  பொதுச்செயலாளர் சசிகலா பற்றியும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் விமர்சித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *