பிரபல நடிகை மனிஷா கொய்ராலா பெண் குழந்தைகளை தத்து எடுக்கிறார்

23 views

இந்தி பட உலகின் பிரபல நடிகையாக இருந்தவர் மனிஷா கொய்ராலா. தமிழிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். இவரது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. விவாகரத்து பெற்றார். பின்னர் புற்றுநோயால் அவதிப்பட்டார்.

தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். சினிமாவில் நடிக்கவும் தொடங்கி விட்டார். இவர் நடித்துள்ள ‘மை டியர் மாயா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் 2 எபெண் குழந்தைகளை தத்து எடுக்க இருக்கிறார்.

இது குறித்து கூறிய மனிஷா கொய்ராலா, “இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து, அதன் மூலம் தாய் ஆகலாம் என்று எண்ணி இருக்கிறேன். அதற்கான சட்ட ரீதியான பணிகளை தொடங்கி விட்டேன். இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு 2 பெண் குழந்தைகளை தத்து எடுத்து விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =