அமெரிக்கா விருது பார்த்திபனுக்கு


 

CqiuDYhUsAAsBfL

 

 

பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை பெற்று, பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். அவருக்கு விருது கிடைத்த பரபரப்பு அடங்குவதற்குள் இயக்குனர், நடிகர், கதாசிரியர் என சினிமாவில் பன்முகம் கொண்ட பார்த்திபனுக்கு அமெரிக்கா அமைப்பு ஒன்று  வழங்கி கௌரவித்துள்ளது.

சினிமாவில் மாறுபட்ட சிந்தனையுடன் பணிபுரிந்து வரும் அவருக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் இயங்கிவரும் Rocheston Accreditation Institute என்ற அமைப்பு, அவரை பாராட்டி ‘மாறுபட்ட இயக்குனர்’ (Distinguished director) என்ற விருதினை வழங்கியிருக்கிறது. பார்த்திபனின் சினிமா படைப்புகளை பாராட்டி, மிக நீண்ட பாராட்டு உரையும் இந்த பெருமையை அவருக்கு அளித்துள்ளது.

அந்த அமைப்பு வழங்கியுள்ள விருது பட்டயம் தங்கமூலம் பூசப்பட்ட சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. எதையும் வித்தியாசமாக செய்ய நினைக்கும் பார்த்திபன், தனக்கு விருது வழங்கப்பட்ட தகவலையும் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தனது முகநூலில் ‘ஏழைக்கேத்த எள்ளுருண்டை’ என்று பதிவு செய்து அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *