பாலியல் பலாத்காரத்துக்கு அரபு நாடுகளைப் போல் இங்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்-பிரியாமணி


கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இது தொடர்பாக பிரியாமணி காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறிய அவர்…. “மாணவி ஜிஷா கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை படிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தியாவில் இனி பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று நினைக்கிறேன். இதே நிலை தொடர்ந்தால் நம் சொந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியாது.

பெண்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பாதுகாப்பான நாடுகளுக்கு செல்ல வேண்டியது தான். நமது நாட்டில் பெண்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை தெய்வமாக வணங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், எப்படி பெண்களை கற்பழித்து கொலை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் குறைய வேண்டும் என்றால் அரபு நாடுகளைப் போல் இங்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியாமணியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என்று மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *