ஜேசுதாஸ் இந்து மதத்துக்கு திரும்பி விட்டதாக டுவிட்டரில்


பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், பிறப்பால் கிறிஸ்தவர் ஆவார். இருப்பினும், அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு அடிக்கடி சென்று வருகிறார். அய்யப்பன் பாடல்கள் உள்பட ஆயிரக்கணக்கான இந்து ஆன்மிக பாடல்களை பாடி உள்ளார். நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஜேசுதாஸ், தனது முன்னோர்களின் மதமான  தகவல் வெளியாகி இருப்பதாகவும், அது உண்மையாக இருந்தால் இந்துக்கள் வரவேற்கலாம் என்றும் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்த தகவலை டுவிட்டரில் ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால், இச்செய்தியை ஜேசுதாஸ் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *