மோகன்லால் சினிமாவில் இருந்து விலகுவாரா ?


மலையாள பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். 56 வயதாகும் மோகன்லால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கோலோச்சி வருகிறார். நடிப்பிற்காக பாரத் விருதும் பெற்றுள்ளார். இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் பொது நலன் சார்ந்த வி‌ஷயங்களில் கருத்துக்கள் சொல்வதிலும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளார்.  சமீபத்தில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் கருத்து  வெளியிட்டார்.

இதுபோல சினிமாவில் இருந்து விலக விரும்புவதாக மோகன்லால் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். மோகன்லாலுக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியிட்ட தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள முன்னணி கதாசிரியர் வாசுதேவன் நாயரின் ‘ரண்டமூலம்’ படத்தில் நடிக்க நடிகர் மோகன்லால் ஆர்வமாக உள்ளார். இது தனது கனவு திட்டம் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தை தயாரிக்க ரூ.600 கோடி செலவாகும் என்று  திட்டமிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு பிறகு மோகன்லால் சினிமாவில் இருந்து விலகுவார் என தெரிகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *