காலி பிளவர் மசாலா | செய்முறை


 

 

தேவையான பொருள்கள்:
காலி பிளவர் -1
தேங்காய் -12முடி
சர்க்கரை -1 ஸ்பூன்
நெய் -5 ஸ்பூன்
இஞசி -1சிறியதுண்டு
கடுகு -1 ஸ்பூன்

பச்சைமிளகாய் -3
சீரகம் -1ஸ்பூன்
மஞசள்தூள் -1
உப்புதேவையான அளவு

செய்முறை

காலிபிளவரின் பூவை முமுவதுமாக வைத்துக் கொள்ளவும். உதிர்க்கக்கூடாது.

கடுகு இஞ்சி பச்சைமிளகாய் ஆகியவற்றை விமுதாக அரைத்துக்கொள்ளவும்

காலிபிளவரின் அடித்தண்டை நீக்கிவிட்டுப் பூவை ஆவியில் வேகவைத்து எடுக்கவும் பூவை உதிர்க்கக்கூடாது.

கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு காயந்தவுடன் தேங்காய்த்துருவல் சர்க்கரை ஆகியன சேர்த்து சிறு தீ எரியும் அடுப்பில் வைத்தது இறக்கி அரைத்து வைக்கவும்.
பின்பு மீண்டும் 1 டேபிள் ஸ்பூன் நெய்விட்டுக் சீரகம் இட்டுப் பொரித்தவுடன் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கி இறக்கி வைக்கவும்
அடுத்து மூன்று டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக் காயந்தவுடன் மஞசள் .உப்புதூள் சேர்த்து காலிஃபிளவர்வரைக் கவனமாக இட்டு பொன்னிறமாக வதக்கி எடுக்கவும்
வதக்கி இறக்கி காலிஃபிளவரை அகலமான தட்டில் வைத்து பின்பு தேங்காய்த்துருவல் கலவையை ஒரே சீராக அதன் மேல் தூவிச் சுடச்சுடப் பரிமாறவும்.

நன்றி : தமிழ்க்குறிஞ்சிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *