அபூர்வமான யோகங்களின் மகத்துவம்.


ஜோதிடம் குறிப்பிடும் அபூர்வமான யோகங்களில் சந்திரிகா யோகமும் ஒன்றாகும்.

லட்சத்தில் ஒருவருக்கு இந்த யோகம் அமையலாம் என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.

சந்திரனுக்கு இரண்டில் குருவும், சனியும் அமர்ந்துள்ள நிலையில், மூன்றாம் இடத்தில் செவ்வாய் மற்றும் எட்டாம் இடத்தில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நிலையில் இந்த சந்திரிகா யோகம் ஏற்படுகின்றது.

கோள்சார ரீதியாக குருவும், சனியும் ஒருமுறை இணைந்து விலகிய பின்னர், மறுபடியும் இணைவதற்கு சுமார் பதினாறு வருடங்கள் எடுக்கும். மூன்றாம் இடத்தில் செவ்வாய், எட்டாம் இடத்தில் சுக்ரன் ஆகியவையும் கச்சிதமாக அமர வேண்டும்.

குறிப்பாக இந்த கிரகங்களுடன் ஏனைய பாவக்கிரகங்கள் சம்பந்தம் ஏற்பட்டால் இந்த யோகம் சிறப்பான பலனை தராது.

இதன் அடிப்படையில் இதை அபூர்வமான யோகமாக சொல்கின்றார்கள்.

இந்த யோக அமைப்பை பெற்றவர்கள் நல்ல பரம்பரையில் பிறந்தவராகவும், கௌரவம் மிக்க உயர் பதவிகளை வகிப்பவராகவும் இருப்பார்.

அரசாங்கத்தின் ஆதரவும், அதிகாரமும் பெற்றிருப்பார். அதேநேரம் பல்வேறு ஆலயங்களின் திருப்பணிகளை முன்னின்று செய்வார்.

நன்றி – najeeLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *