தமிழர் மண்ணில் மீண்டும் இராணுவ சோதனை சாவடி; மக்கள் அசௌகரியம்


வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று இன்றையதினம் காலை அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பின்னர் அகற்றப்பட்டிருந்த நிலையில்  தற்போது மீண்டும் அவ் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பம்பைமடு பகுதியில் முகாம் அமைத்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால்  குறித்த சோதனை சாவடி அமைக்கபட்டுள்ளதுடன் அவ்வீதியால் பயணிக்கும் அனேகமான பயணிகள் மற்றும் வாகனங்கள் பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயணிக்க அனுமதிக்க படுகின்றனர்.

இதனால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியதுடன் விசனமும் தெரிவித்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயமாதலால் ஒளிப்பதிவு எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என இராணுவத்தினர் இதன்போது தெரிவித்திருந்ததுடன், வேறு விடயங்களை கூறவும் மறுத்து விட்டனர்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *