“எங்கள் வீட்டில் அப்படி கிடையாது.”


“சில வீடுகளில் இந்தத் துறையில் இருப்பவர்கள் மற்றவர்களுடைய வேலைகளில் தலையிடமாட்டார்கள். ஆனால், எங்கள் வீட்டில் அப்படி கிடையாது.”

‘கென்னடி கிளப்’, ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’, ‘குதிரை வால்’ போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருபவர் சேத்தன். ஷூட்டிங் முடிந்து தற்போது சென்னை திரும்பியிருக்கும் அவரிடம் பேசினேன்.

”ஒரு நடிகனாக தன்னை திருப்திபடுத்திக்கவும், நிரூபிக்கவுக்கவும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கு. தேவதர்ஷினியும் சரி, நானும் சரி சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா 3’ எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எப்படித்தான் கோவை சரளா மேடத்துக்கும், தேவதர்ஷினிக்கும் இப்படி செட் ஆச்சுனே தெரியல.

தேவதர்ஷினி நடித்ததில் பிடித்தது?

எனக்கு தேவதர்ஷினி நடித்த ‘காஞ்சனா 1’ பிடித்தமான படம். அதில் கோவை சரளாவுடன் இருந்த காம்பினேஷன் அவ்வளவு பொருத்தமாக இருந்தது. அதற்கு முன்னாடி 2000ம் ஆண்டுகளில் டி.வியில் ஒளிபரப்பான ரமணி Vs ரமணியில் அவர் செய்யும் காமெடி, நடிப்பு எல்லாம் பிடிக்கும்.

உங்க பொண்ணு ’96’ படத்துல நடிச்சது?

அவங்களுக்கு ஏற்கெனவே நடிப்பில் ஆர்வம் அதிகம் இருந்ததால்தான் 96 படத்தில் அவ்வளவு அழகாக நடிச்சிருந்தாங்க. அப்போ ஷூட்டிங் போகும்போதுகூட, அவங்களுக்கு நிறைய நடிப்பு சம்பந்தமாக நானும், தேவதர்ஷினியும் டிப்ஸ் கொடுத்தோம். இனி படிப்பு முடியட்டும் என காத்திருக்கிறோம்.

சில வீடுகளில் இந்த துறையில் இருப்பவர்கள் மற்றவர்களுடைய வேலைகளில் தலையிடமாட்டார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அப்படிக் கிடையாது. எந்த விஷயமாக இருந்தாலும் பகிர்ந்து கொள்வோம்.

இது எங்களுக்குள் தவறாமல் நடிக்கிற நல்ல விஷயம்னுகூட சொல்லலாம். அவருடைய நடிப்பில் எதாவது சந்தேகம் இருந்தாலோ, என் சார்பில் என்ன மாற்றிக்கொள்ள வேண்டியது என்னவோ அதையெல்லாம் ஒருவருக்கொருவர் பேசி சரி செய்து கொள்வோம். அதனால்தான் இன்று வரை எங்களுடைய பெஸ்டை கொடுக்க முடியுது” என்றார் சேத்தன்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *