முதலமைச்சரின் வாராந்த கேள்வி பதிலில்!


 

போரில் இறந்தவர்களை நினைவு கூருவது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்வி பதிலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகளைக் கேட்பது இக்கட்டான நிலையை ஏற்படுத்துமானால் நாம் மௌனம் சாதிக்க வேண்டும். அவ்வாறு அமைதியாக இருந்தால் அது எமக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இன்றைய நிலையில் ‘ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்தாதீர்கள்’ என்று நாங்கள் சொல்கின்றபோது, தெற்கு எவ்வளவு குட்டினாலும் அதனை வாங்கிக் கொண்டு பணிந்து நடவுங்கள் என்று சொல்வது போல் இருக்கின்றது.

இந்தநிலையில், எமது உரித்துக்களைப் பெறும் வரையில் நாம் போராடா விட்டால் நாம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். யுத்தத்தின் பின்னர் இனப்பரம்பலை விரிவுபடுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இந்தநிலை தொடர்ந்தால் வட கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையினராகக் கணிக்க முடியாத நிலையே உருவாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.பி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *