கிறிஸ் கெய்ல் புதிய சாதனை!


உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில், அஷிம் அம்லாவின் பிடியெடுப்பை எடுத்தன் மூலம், மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், அதிக பியெடுப்புக்களை எடுத்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல், படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் கார்ல் கூப்பர் 120 பிடியெடுப்புக்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது கிறிஸ் கெய்ல் முறியடித்துள்ளார். இந்த பட்டியலில், ஜாம்பவான் பிரையன் லாரா 117 பிடியெடுப்புக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதற்கிடையில், கிறிஸ் கெய்ல், இந்த உலகக்கிண்ண தொடருடன் தனது 20 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கவுள்ளார். அதிக அனுபவம் வாய்ந்த வீரரான கிறிஸ் கெய்ல், மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 292 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,222 ஓட்டங்களை குவித்துள்ளார்.

ஜாம்பவான் பிரையன் லாராவுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை எடுத்த 2ஆவது மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டுள்ள கிறிஸ் கெய்ல், நடைபெற்றுவரும் உலக்கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக ஓட்டங்களை குவித்த லாராவின் சாதனையை கெய்ல் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி – Anojkiyan

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *