பூகோள தொடரில் இலங்கை!


 

எதிர்வரும் 28ம் திகதி முதல் ஜூலை மாதம் 15ம் திகதி வரை கனடாவில் பூகோள இருபதுக்கு இருபது இப்போட்டித் தொடர் இடம்பெறவுள்ள நிலையில் 4 இலங்கை கிரிக்கட் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கிரிக்கட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி , லசித் மாலிங்க , திசர பெரேரா , இசுரு உதான மற்றும் தசுன் சானக இந்த போட்டித் தொடரில் கலந்து கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த தொடரில் கிரிஸ் கேல் , டெரன் சமி , சயிட் அப்ரிடி மற்றும் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகிய வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *