இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி


இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க களத்தடுப்பைத் தெரிவுசெய்தார்.

இலங்கை அணியில் அவிஷ்க பெர்னாண்டோ, சுகன் ராஜித ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதுடன், உபுல் தரங்கவும் லக்ஸான் சந்தேகனும் நீக்கப்பட்டனர். அணித்தலைவர் பெப் டு பிலேசி 57 ஓட்டங்களைப் பெற்றதுடன் சர்வதேச ஒருநாள் அரங்கில் 5000 ஓட்டங்களைக் கடந்தார்.

தேர்ன்னாபிரிக்க அணி ஒரு கட்டத்தில் 36.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களுடன் வலுவாக இருந்தாலும் எஞ்சிய 5 விக்கெட்டுகளும் 31 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. அதன்படி தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் 45.1 ஓவரில் 251 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் முதல் 5 விக்கெட்டுகளும் 92 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. 4 ஓட்டங்களுக்குள் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களை இழந்தது.

32.2 ஓவர்களில் இலங்கை அணியின் சகல வீரர்களும் ஆட்டமிழந்த நிலையில், 138 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை அணியால் பெறமுடிந்தது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *