கொழும்பில் துப்பாக்கிச்சூடு!


 

கொழும்பு கடவத்த, கோனஹேன, ஆம்ஸ்ரோங் சந்தியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (07) பிற்பகல் அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *