பட வாய்ப்புக்கள் குறைவதால் நமீதா அரசியலுக்கு வருகிறாரா??


namitha-14032014

நமீதா தேர்தலில் போட்டியிடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நமீதா அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.
இது குறித்து நமீதா கூறியதாவது:–

நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். 3 கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளன. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிட எனக்கு விருப்பம் உள்ளது. எந்த தொகுதியில் நிற்பேன் என்பதை இப்போது சொல்ல முடியாது.

images (1)
அரசியல் கட்சியில் இணைந்த பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அதை விரைவில் எதிர் பார்க்கலாம். நான் அரசியலில் ஈடுபடுவதால் சினிமா வாழ்க்கை பாதிக்குமா என்ற கேள்விக்கு இடமில்லை. காரணம் இப்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டு இருக்கவில்லை. நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் நடிப்பேன்.
தமிழக மக்கள் என் மீது நிறைய அன்பு வைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதேனும் திருப்பி செய்யும் நோக்கில் தான் அரசியலுக்கு வருகிறேன். தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. தமிழக அரசியலில் தான் ஈடுபடுவேன். மக்களிடம் நிறைய அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த தேர்தலில் நிறைய வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு நமீதா கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *