இதுவரை சிம்புவின் காதல் வலையில் விழுந்தவர்கள் யார் யார்? பகீர் தகவல்களுடன்..


simbu-nayana-hansika-img

கோலிவுட்டை பொறுத்தவரை இப்போதைக்கு கலக்கி கொண்டிருக்கும் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ் என்றால் அது சிம்பு–ஹன்சிகா காதல் முறிவு விவகாரம்தான்.

இன்றைய கோலிவுட்டில் பல மன்மதன்கள் இருந்தாலும் சில பேர் மட்டுமே மன்மதன் சீட்டில் பட்டா போட்டு அமர்ந்து உள்ளனர். அந்த வரிசையில் படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் மன்மதன் தான் சிம்பு. பல முன்னணி கதாநாயகிகளை தன் காதல் வலையில் விழ வைத்தவர்.

முன்பு, பிரபல நடிகரின் மகளை சிம்பு காதலித்ததாகவும், பிறகு அந்த காதல் பிரேக் அப் ஆனதாகவும் பல வருடங்களுக்கு திரையுலகில் ஒரு பேச்சு இருந்தது. அது பின்னாட்களில் உண்மைதான் என உறுதியானது. காரணம் இணையத்திலும், செல்போன் வழியாகவும் உலா வந்த ஒரு தொலைபேசி உரையாடல்.

அந்த உரையாடலில் சிம்புவும், பிரபல நடிகரின் மகளும் காரசாரமாக உரையாடுகிறார்கள். பின்னர் அப்பெண்ணின் அம்மா, அதாவது பிரபல நடிகரின் மனைவி சிம்புவிடம் பேசுகிறார். மிக அந்தரங்கமான இந்த உரையாடல் வெளியே வந்தது எப்படி? யார் இதை பதிவு செய்தார்கள்? யார் இதை இணையத்திலும், செல்போன் வழியாகவும் பரப்பினார்கள்?

சில காலம், ரொம்பவும் நல்ல பிள்ளையாக அடக்கி வாசித்த சிம்பு, பிறகு நயன்தாரா உடன் காதல்வயப்பட்டார். ஆனால் அவர்கள் உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டது. சில மாதங்களில் நயன்தாரா சிம்புவை வெட்டிவிட்டார். வழக்கம்போல் உக்கிரமானார் சிம்பு. சில நாட்களில், நயன்தாரா உடன் சிம்பு உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அந்த புகைப்படங்களில் நயன்தாராவின் உதட்டை கவ்விக்கொண்டிருந்தார் சிம்பு.

இந்தப் புகைப்படங்கள் நயன்தாராவும் சிம்புவும் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இந்த புகைப்படங்கள் வெளியே வந்தது எப்படி? யார் இதை எடுத்தார்கள்? யார் இதை மீடியாவுக்குக் கொடுத்தார்கள்?

நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் சிம்பு, ஹன்சிகாவை காதலித்து வந்தார். இருவரும் காதலிப்பதை மறைத்து வைக்காமல் அறிவிப்பு வெளியிட்டனர். இதன் பின்பு ஹன்சிகாவின் பிறந்தநாளுக்கு கேக் ஒன்றை பரிசாக அளித்தார், இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களும் வெளியானது. இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆறே மாதங்களில் சிம்புவும் ஹன்சிகாவும் தங்கள் காதலை முறித்துக் கொண்டதாக தனித்தனியாக அறிவித்துள்ளனர்.

பிரபல நடிகரின் மகளுடனும், நயன்தாரா உடனும் காதல் பிரிவு ஏற்பட்டபோது அந்தரங்கமான விஷயங்கள் எப்படி வெளியே விடப்பட்டதோ, அதுபோலவே இதோ இப்போதும் ஹன்சிகா உடனான காதல் முடிவுக்கு வந்துவிட்டநிலையில் சிம்பு ஹன்சிகா காதல் முறிந்துபோனதற்கான காரணம் என்று, ஹன்சிகா பற்றிய ஒரு பகீர் தகவலை படு வேகமாக படத்துறையில் பரப்பி வருகிறார்கள்.

அது என்ன காரணம்னா?

இந்த முறிவுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். ஒன்று தன் பழைய காதலி நயன்தாராவும் சிம்புவும் மீண்டும் நெருக்கமாகிவிட்டது ஒரு காரணம் என்கிறார்கள். இன்னொன்று, சிம்புவைக் காதலிப்பதாகச் சொன்ன ஹன்சிகா, இன்னொரு பக்கம், தெலுங்கு நடிகர் ஒருவருடன் அந்தரங்கமாக இருந்தார் என்றும், இதனால்தான் சிம்புவுக்கும் அவருக்கும் சண்டை வந்ததாகவும் சொல்கிறார்கள்.

சிம்புவின் காதல்களையும், காதல் பிரிவுகளையும் தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு விஷயம் புரியும். உருகி உருகி காதலிக்கும் சிம்பு, காதல் முறிந்த பிறகு உக்கிரமாக மாறிவிடுகிறார். காதலித்த பெண்ணைப் பற்றியும், காதலித்தக் காலத்தில் அப்பெண்ணுக்கும் தனக்குமான அந்தரங்க விஷயங்கள் பற்றியும் வெளியே பரப்பி விடுவார்.

சிம்பு வெளிப்படையாக அறிவித்த காதல்கள் மட்டும்தான் இதெல்லாம். ஆனால் அவர் பற்றி வந்த காதல் அல்லது கசமுசா கிசுகிசுக்களுக்கு அளவே இல்லை. குறிப்பாக தன்னைவிட சீனியர் நடிகைகள் மூன்று பேருடன் அவர் ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *