வடமாகாண முதலமைச்சரின் யோசனை-வடக்கில் உருவாகவுள்ள ஹோட்டல் முகாமைத்துவப் பாடசாலை


இலங்கைசுற்றுலாத்துறை அதிகாரசபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் நிதிப்பங்களிப்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சின் அனுசரணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தலைமன்னார் கடற்கரைப்பூங்கா கடந்த 03.10.2018அன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது உரையாற்றிய முதலமைச்சர், நாட்டின் வளர்ச்சியில்  சுற்றுலாத்துறை பெரும்பங்கு வகிக்கின்றது.அந்தவகையில் மக்களைக்கவரும் சுற்றுலா மையமாக  தலைமன்னார் மாறிவருவதோடு வடக்கில் சுற்றுலாத்துறையை  அதிகரிக்கும் வகையில் .விரைவில் கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல்கள் உருவாக்குவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால், அவற்றில் கடமைபுரியக்கூடிய வகையில் இளைஞர் யுவதிகளை பயிற்றுவிக்கும் நோக்கில், வடபகுதியில் ஹோட்டல் முகாமைத்துவப் பாடசாலை அமைக்கப்பட வேண்டும் எனக்கூறியுள்ளார்.
அத்துடன் அதற்கு தேவையான அமைவிடம் மற்றும் நிலம்  ஆகியவற்றை வழங்குவதற்கு தமது அமைச்சு தயாராக உள்ளதாக தெரிவித்ததோடு, குறித்த பாடசாலையை அமைப்பதற்கான நிதி உதவியை வழங்குமாறு   சுற்றுலா துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது எதிர்காலத்தில் அதிகரித்து வரும் வேலையில்லா பிரச்சினைக்கு  ஒரு தீர்வாக அமையலாம் எனவும்எண்ணப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *