தந்தை மகனாக தனுஷ்


தனுஷ் நடிப்பில் வடசென்னை, மாறி-2 படங்கள் வந்தன. இரண்டுமே தாதாக்களின் அதிரடி கதை. அதன்பிறகு வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். ஜனவரியில் தொடங்கி இதன் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது புதிய படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே கொடி என்ற அரசியல் படம் வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இது தனுஷுக்கு 39 வது படம் ஆகும். இந்த படத்தில் சினேகாவும் இருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டையில் இருவரும் நடித்து இருக்கின்றனர். 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் தந்தை, மகன் ஆகிய 2 வேடங்களில் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகன் தனுஷ், திருடன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தந்தை தனுஷுக்கு ஜோடியாக சினேகா வருகிறார். மகன் தனுஷுக்கு ஜோடி தேடி வருகிறார்கள்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *