சிறுநீரக பாதிப்பால் முன்னாள் போராளி உயிரிழப்பு!


வவுனியா ஓமந்தை பகுதியில்  வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் யாழ் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஓமந்தை மாதர்பனிக்கர்குளம் எனும் முகவரியில்  வசித்து வந்த முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளியான இராசையா இராசகுமாரன் 42வயது 6பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி கடந்த 20ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து  சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்டு நேற்று 23.03.2018 பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஓமந்தை, மாதர்பனிக்கர்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவர் கடந்த சில வருடங்களாக சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *