லியோனியுடன் நடிக்க விரும்பும் வடிவேல்!


லியானியின் பிறந்த நாளான இன்று புத்தகத்தின் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய போது  ‘நான் நடித்த ஒரே திரைப்படம் ‘கங்கா கௌரி’. இதில் அருண் விஜய், வடிவேலுக்கு அப்பாவாக நடித்தேன். பின்னர், ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் பட்டிமன்றம் ராஜா நடித்த கதாபாத்திரத்தில் என்னைத்தான் நடிக்க வைக்க அணுகினார்கள். நான் தான் மறுத்து விட்டேன்.

இப்போது  வடிவேலு என்னிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அதில் வடிவேலு, ரோபோ சங்கர், சூரி ஆகியோர் அண்ணன் தம்பிகள். இவர்களுக்கு நான் அப்பாவாக நடிக்க வேண்டும் என்று கூறினார். மீண்டும் என்னுடன் நடிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு விருப்பம் தெரிவித்திருக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமியும், அவர் இயக்கும் அடுத்த படத்தில் என்னை நடிக்க வைக்கும் திட்டத்தில் உள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *