இயக்குனர் பாலாவுக்கு நேர்ந்த நிலை!


நடிகர்கள் விக்ரம், சூர்யா, அதர்வா, ஆர்யா ஆகியோர் இன்று முன்னணி நடிகர்களாக இருப்பதற்கு இயக்குனர் பாலா ஒரு முக்கியமான காரணம்.

பாலா இயக்கிய சேது, நந்தா, பிதாமகன், பரதேசி, நான் கடவுள் ஆகிய படங்கள் மக்கள் மத்தியிலும், சினிமா பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள்.

இதில் பிதாமகன் படத்திற்காக நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் இவரது படங்களில் நடித்தால் அவர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதால் ஒரு கட்டத்தில் பாலா படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் போட்டி போட்டு கால் சீட் கொடுத்தனர்.

ஆனால், பாலா இயக்கிய அந்தப் படம் தாங்கள் எதிர்பார்த்த தரத்தில் இல்லை என்று கூறி, தயாரிப்பு நிறுவனம் முழு படத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் வேறு இயக்குனரை வைத்து புதிதாக படத்தை எடுத்தது.

இப்படி, ஒரு பிரபல இயக்குனர் இயக்கிய படத்தை தரக்குறைவாக இருப்பதாகச் சொல்லி தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது தமிழ் சினிமா வரலாற்றில் இது முதல் முறை.

இதனையடுத்து பாலா ஆர்யாவை வைத்து படம் எடுக்க பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் ஆர்யாவும் கால்சீட் இன்னும் தரவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, இயக்குனர் பாலா தற்போது வரை எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.

நன்றி -leemaLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *