ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிக்க வேண்டும் – டொனால்ட் டஸ்க்


ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிக்க வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதமர் தெரேசா மேயின் பிரெக்சிட் ஒப்பந்தம், அந்நாட்டு பாராளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டொனால்ட் டஸ்ட் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். ஒப்பந்தத்துக்கான சாத்தியமில்லாத அதேநேரம் ஒப்பந்தத்துக்கு எவரும் தயாரில்லாத நிலையில், அனுகூலமான பதில் என்ன எனத் தெரிவிக்கும் தைரியம் யாருக்கு உள்ளது என, டொனால்ட் டஸ்க் தந்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, பிரெக்சிட் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பில் பிரித்தானிய கீழ்சபையில் நடாத்தப்பட்ட தீர்மானமிக்க வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், தெரேசா மே கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளார்.

இதேவேளை, அவருக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. குறித்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றால் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *