வீடு இழந்த 50 விவசாயிகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் லாரன்ஸ்


காஜா புயலால் வீடு இழந்த விவசாயிகளுக்கு வீடு கட்டிக்கொடுக்க லாரன்ஸ் முடிவுசெய்துள்ளார்.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பதிவில், “கஜா புயலால் வீடு இழந்த விவசாயிகளுக்கு 50 வீடுகள் கட்டித்தர இருக்கிறேன். அதற்கு உங்களது ஆசிர்வாதம் தேவை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும், துக்கத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்.

எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும், அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலை வணங்குகின்றேன்,

ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்க்கதியாக ஒரு குடும்பம் நிற்பதை பார்த்தேன். வேதனை அடைந்தேன். அந்த வகையில் குடிசை வீடு அழகாகக் கட்டித்தர எவ்வளவு ஆகும். மிஞ்சிப் போனால் ஒரு லட்சம் ஆகும்.

அந்த வீடு மட்டுமில்லை. இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்ட வீடுகளை கட்டித்தர உள்ளேன். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.

அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *