மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு யோகா கருத்தரங்கம்


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்  பன்னாட்டு யோகா கருத்தரங்கம் புதன்கிழமை பல்கலைக்கழக பிரிவீயூ தியேட்டரில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) வழிகாட்டுதலின் கீழ் பன்னாட்டு யோகா தினவிழாவை முன்னிட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல் துறையின் ஒருங்கிணைப்பின் கீழ் திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயமும், சிங்கப்பூர் பாலயோகி யோகா மையமும், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டமும், மதுரை மண்டல  உலக சமுதாய சேவா சங்கமும், மதுரை மண்டல பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலமும், ஈரோடு ஆய்த எழுத்து – பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதலும்  மதுரை பாத்திமா கல்லூரியும், இ.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரியும், மதுரை காந்திய சிந்தனைக் கல்லுரியும்    இணைந்து தற்கால ஆசிரியர்கள் மாணவர்கள் மேம்பாட்டில் யோகாவின் பங்களிப்பு என்னும் பொருளில் முதலாவது பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தியது.

கருத்தரங்க நிகழ்விற்குத்  தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ம.திருமலை தலைமையேற்று விழாப் பேருரையாற்றினார்.

விழாவிற்கு வருகைதந்த அனைவரையும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் தமிழியற்புலத் தமிழியல்துறை உதவிப்பேராசிரியருமான முனைவர் போ.சத்தியமூர்த்தி வரவேற்றார்.

விழாவில் தென்கைலாயம் திருமூர்த்திமலை தத்துவ தவ உயர்ஞானபீடம், உலக சமாதான   ஆலய குருமகான், ஜெகத்குரு மகாமகரிஷி பரஞ்சோதியார்  அவர்கள் ஆய்வுக்கோவையை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழ கன்வீனர் குழு உறுப்பினர் பேராசிரியர் ம.இராமகிருஷ்ணன் அவர்கள் ஆய்வுக் கோவையைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில் சிங்கப்பூர் பால யோகா மைய நிறுவனத்  தலைவர் முனைவர் யோகி ஸ்ரீ பாலகிருஷ்ணன் சுவாமி, துபாய் ஹாத வித்யா யோகா பள்ளியின் நிறுவனர் யோகி பாலா,  சிங்கப்பூர் பால யோகா மையத்தின் இயக்குனர் ராஜேஸ் கிரி, சிங்கப்பூர் பால யோகா மைய ( காசி) உதவி இயக்குனர் ஜெய் சந்ரா, சிங்கப்பூர் பால யோகா மைய (அலகாபாத்) கசு+ல் ஷா ஆகியயோர் அயலகப் பேராளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கருத்தரங்கில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்த்திரேலியா, பிரான்சு. கனடா, இலங்கை, துபாய் போன்ற நாடுகளில் இருந்தும் 60 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு நூலாக வெளியிடப்பெற்றன. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் இருந்தும் பேராளர்கள் கலந்தகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினர்.

விழாவில் தமிழியற்புல மேனாள் தலைவர் பேராசிரியர் ஏஆதித்தன், திருமூர்த்திமலை உலக சமாதான   ஆலய பொதுச்செயலாளர் கா.சி.சுந்தரராமன், பல்கலைக்கழக நூலகர் முனைவர் சுரேஷ், பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் அறிவழகன், திருமூர்த்திமலை உலக சமாதான   ஆலய மதுரை மண்டல பொறுப்பாளர் சந்தோஷ் சுப்பிரமணியன், தமிழியற்புலப் பேராசிரியர்கள் செ.ரவிசங்கர், பாத்திமா கல்லூரி பேராசிரியர் ஜெனோ,காந்திய சிந்தனைக் கல்லூரி முதல்வர் எஸ்.முத்துலெட்சுமி, உலக சழுதாய சேவா சங்க மதுரை மண்டலத் தலைவர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த அங்கத்தினர்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்கள், பாதித்மா கல்லூரி மாணவியர்கள், யாதவா மகளிர் கல்லுரி மாணவியர்கள் மற்றும் பல்கலை, கல்லூரிப் பேராசிரியர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 400 பேர் கலந்துகொண்டனர். நிறைவாக இக்கால இலக்கியத்துறைத் தலைவர் முனைவர் வை.இராமராஜபாண்டியன் நன்றி கூறினார்.

நிறைவு விழாவிற்குத் தமிழியற்புலத் தலைவர் பேராசிரியர் செ.சாரதாம்பாள் தலைமை வகித்ததார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தமிழியற்புல உதவிப்பேராசிரியர் முனைவர் பெ.சுமதி வரவேற்றார். விழாவில் மலயா பல்கலைக்கழக வருகைதரு பேராசிரியரும் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமாகிய பேராசிரியர் கி.கருணாகரன் கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராளர்களுக்குச் சான்றிதழ் வழங்கி விழாப் பேருரையாற்றினார்.

இன்றைய சமுதாயத்திற்கு யோகாவின் தேவையையும் அதன் அவசியத்தையும் உணர்த்தும் எண்ணத்தில் உள்நாடு, அயல்நாடுகளில் பயிலும் பள்ளி, கல்லூரி,பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்களுக்குப் (நேரில்,இணையவழி) பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி,கவிதைப் போட்டிகள் நடத்திப் பரிகள், சான்றிதழ்கள் வழங்கப்பெற்றது. இப்போட்டிகளில் இந்தியா, இணையவழியில் சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கடனடா ஆகிய நாடுகளில் இருந்து கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் தமிழியற்புலத் தமிழியல்துறை உதவிப்பேராசிரியருமான முனைவர் போ.சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

பன்னாட்டு யோகா கருத்தரங்க ஆய்வுக்கோவையை தென்கைலாயம் திருமூர்த்திமலை தத்துவ தவ உயர்ஞானபீடம், உலக சமாதான   ஆலய குருமகான், ஜெகத்குரு மகாமகரிஷி பரஞ்சோதியார்  அவர்கள் வெளியிட, மதுரை காமராசர் பல்கலைக்கழ கன்வீனர் குழு உறுப்பினர் பேராசிரியர் ம.இராமகிருஷ்ணன் ஆய்வுக் கோவையைப் பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். உடன்  தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ம.திருமலை சிங்கப்பூர் பால யோகா மைய நிறுவனத்  தலைவர் முனைவர் யோகி ஸ்ரீ பாலகிருஷ்ணன் சுவாமிஇ துபாய் ஹாத வித்யா யோகா பள்ளியின் நிறுவனர் யோகி பாலா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் போ.சத்தியமூர்த்தி.

01mku101mku2 (1)

பன்னாட்டு யோகா கருத்தரங்க மாநாட்டில் கலந்துகொண்டு சிறந்த ஆய்வுக் கட்டுரையை வழங்கிய சிங்கப்பூர் பால யோகா மைய நிறுவனத்  தலைவர் முனைவர் யோகி ஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களுக்கு  சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்குகிறார் மலயா பல்கலைக்கழக வருகைதரு பேராசிரியரும் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமாகிய பேராசிரியர் கி.கருணாகரன். உடன் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் போ.சத்தியமூர்த்தி.

01mku301mku4

பன்னாட்டு யோகா கருத்தரங்க மாநாட்டில் கலந்துகொண்டு சிறந்த ஆய்வுக் கட்டுரையை வழங்கிய பாத்திமா கல்லூரிக்கு சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்குகிறார் மலயா பல்கலைக்கழக வருகைதரு பேராசிரியரும் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமாகிய பேராசிரியர் கி.கருணாகரன். உடன் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் போ.சத்தியமூர்த்தி.தமிழியற்புலத் தலைவர் பேராசிரியர் செ.சாரதாம்பாள்.

 

 

– முனைவர் போ. சத்தியமூர்த்தி | உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம் | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *