எந்திரனை மிஞ்சிய ராமனின் மந்திரம் – அரங்கம் நிறைந்த கோவைவாசிகள்


கடந்த டிசம்பர் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கிக்கானி மேல்நிலைப் பள்ளியின் சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில்சென்னை குழுவினரின் சீதையின் ராமன் என்ற பிரமாண்ட நாடகம் நடைபெற்றது.

இந்நாடக நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பிரம்மாண்டமான காட்சியமைப்புக்கள், ஒளி மற்றும் ஒலி அமைப்புக்கள், உடையலங்காரங்கள், நேர்த்தியான ஒப்பனைகள் என ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தன.

இராவணனால் கடத்தப்பட்ட பின் அசோக வனத்தில் சீதை, திரிசடையிடம் இராமனின் கதையைச் சொல்வது போல் ஆரம்பித்து அடுத்தடுத்த காட்சிகளில் நகைச்சுவை,சோகம்,நெகிழ்ச்சி என விறுவிறுப்பாக நகர்ந்தது. முக்கியமாய் காட்சிகளுக்கிடையில் அமைந்திருந்த மாயக்காட்சிகள் குழந்தைகளை மகிழ்வித்தன.

இந்நாடகம் சிறப்பாக நடைபெற்றமைக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கூல் ஈவண்ட்ஸ் குமார் ஆகியோரின் பங்கு முக்கியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *