எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீதையின் ராமன் என்கிற பிரம்மாண்டமான இராமாயண நாடகம் கோவையிலுள்ள கிக்கானி மேல்நிலைப் பள்ளியின் சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.
மாயாஜாலக் காட்சிகளுடன் கூடிய இந்நாடகத்தில் அறுபது நாடகக் கலைஞர்கள் பங்குபெறுகிறார்கள். மாலை 6 மணி அளவில் தொடங்கும் இந்நாடக நிகழ்விற்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் சென்னை குட்டி குழுவினருடன் கூல் ஈவண்ட்ஸ் குமார் ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர்.