ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது சவுதி!


ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய ஆளில்லா விமானத்தை சவுதி கூட்டுப்படைகள் வழிமறித்து அழித்துவிட்டன.

இத்தகைய தாக்குதல்களால் சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆத்திரம் கொண்டு அவ்வப்போது அந்த நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள அபா நகர விமான நிலையம் மற்றும் மின்நிலையம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் ஒன்றை அனுப்பி வைத்தனர்.

ஆனால் இந்த ஆளில்லா விமானத்தை சவுதி கூட்டுப்படைகள் வழிமறித்து அழித்துவிட்டன.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாவதற்குள்ளாக அவர்களின் ஆளில்லா விமானம் வீழ்த்தப்பட்டு விட்டது என்று சவுதி கூட்டுப்படைகளின் செய்தி தொடர்பாளர் துர்கி மாலிகி கூறினார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *