துபாயில் திறக்கப்படவுள்ள கண்!


துபாயில் மிகப் பிரமாண்டமான அருங்காட்சியகம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த அருங்காட்சியகம் மிகப்பெரும் கண் போன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் வெளிப்புறத்தில் அரேபிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவைக் கட்டி வியப்பில் ஆழ்த்திய அதே நகரத்திலேயே இந்த பிரம்மண்ட Museum of the Future என்று அழைக்கப்படும் கண் போன்ற வடிவமைப்பிலான கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது.

துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் கட்டுப்பாட்டில் இயங்கும் Dubai Future Foundation என்னும் அமைப்பின் மூலம் இந்த கட்டடம் கட்டும் பணி நிர்வகிக்கப்படுகிறது.

துபாயின் பிரபல வடிவமைப்பு குழுமமான Killa Design என்ற நிறுவனமே இந்த கட்டடத்தையும் முழுவதுமாக வடிவைத்திருக்கிறது.

2020 ஆம் ஆண்டு திறக்கப்பட இருக்கும் இந்த “கண்” கட்டிடம் துபாயின் எதிர்கால சுற்றுலா மற்றும் அறிவியல் துறைகளில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்கிறார்கள் வல்லுனர்கள்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *