சோழ வழிமீது சத்தியம் ஈழ வலி மீது சத்தியம்! கவிதை


துரோக ஆற்றாமையில்
தீ நாறாய்ப் போகிறது
சோழ காதை
ஆனாலுமென்ன
புலிக்கொடிதாங்கிய
தஞ்சைப் பெருங்கோயிலான்
சாய்ந்திடுவதில்லை
சரிந்தும் எரிந்திடுவதில்லை
ஆழக்கடலெங்கும் சோழமகராசன்
ஆட்சி புரிந்தானென
பாடினான் பாவலன்அன்று
வன்னிக்கடலெங்கும்
முப்படை நீட்டி
விடுதலை பாடினான் கரிகாலனின்று
டில்லிமீதிலோர் காதலால்
தவளைகள் பிதற்றலைக் கண்டீர்
அவர் யார் சனித்த மகவோ
மாமன்னர் இழிதலைக் கண்டீர்
ஆன்றறிந்து பகர்கிறேன்
கடல் கடந்த சோழன் வீழ்வதில்லையென்பதை
வங்கங் கடந்தவன்
சிங்கப்பூர் மலேசியா ஈழம்
யாவும் ஒளிர்ந்திடல் செய்தான்
தாய் சேய் நீதியை
பசுவிலே வரைந்தான்
திருமுறைகள் கொய்து
தமிழினை யாத்தான்
மனுநீதி குலோத்துங்கன் கரிகாலனாகி
புகழினைச் சூடினான்
ராஜ ராஜ சோழன்
புல்லர்கள் வசையினில்
வதைவாதுமில்லை எங்கள்
புகழ்மிக்க சோழனாய் வரலாறு பாடும்
அவன் வசைபாடல் நிகழின்
இனி நெருப்பாறே ஓடும்
இது சோழ வழிமீது சத்தியம்
ஈழ வலி மீது சத்தியம்
0
த. செல்வா


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *