தோல்வி உடைமாற்றும் அறையில் வெறுப்பை ஏற்படுத்தியது!


உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடனான தோல்வி, உடைமாற்றும் அறையில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்ததாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஓய்ன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) லீட்ஸ் -ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில், இங்கிலாந்து அணி, 20 ஓட்டங்களால் போராடி தோற்றது.

இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஓய்ன் மோர்கன் கூறுகையில்,

‘நாங்கள் சிறந்த முறையில் பந்துவீசியிருந்தோம். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு இலங்கை அணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து ஓட்டங்களை வழங்குவதில் கட்டுப்படுத்தினோம்.

இதனால் இலகுவான ஓட்ட எண்ணிக்கையொன்றை நாங்கள் பெற்றுக் கொண்டோம். எனினும், தேவையான நேரத்தில் இணைப்பாட்டங்களை மேற்கொள்ள தவறியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

இரண்டு வீரர்களின் தனிப்பட்ட திறமைகள் எம்மை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்றன, அவர்களது திறமைகள் மாத்திரம் வெற்றிக்குப் போதாது. எனினும், இறுதியில் எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்த தோல்வியானது உடைமாற்றும் அறையில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

உண்மையில் இந்தப் போட்டித் தொடரில் ஒவ்வொரு போட்டியும் மிகவும் கடினமானவை, நாங்கள் இதைப் பற்றி நிறைய தடவைகள் பேசியிருந்தோம் இரண்டு அணிகளுக்கும் இந்த ஆடுகளம் சவாலைக் கொடுத்திருந்தது. உண்மையில் இது பந்துவீச்சாளர்களுக்கான நாள்.

எனவே இந்த தொடர் முழுவதிலும் அவ்வாறான சந்தர்ப்பங்களை அவதானிக்கலாம். எனவே அதற்கேற்ப எம்மை மாற்றியமைக்க வேண்டும்.

இது ஒரு போட்டியாகும், அங்கு நீங்கள் இழைக்கின்ற தவறுகளை சரிசெய்ய வேண்டும். எனவே ஒரு வலுவான அணியாக நாங்கள் திரும்பி வருவோம். அதுவே எங்களின் பலமாக உள்ளது.

நாங்கள் மிகவும் போட்டித் தன்மையுடன் விளையாடவுள்ளோம். அதேபோல, இந்த உலகக் கிண்ணத்தில் எம்மால் அனைத்துப் போட்டிகளையும் வெற்றிகொள்ள முடியாது’ என அவர் கூறினார்.

நன்றி  –  AnojkiyanLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *