நியூஸிலாந்தை வீழ்த்தி அரையில் கால்பதித்த இங்கிலாந்து!


நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 41 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட் மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்தது.

306 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து அணி 45 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 119 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

நியூஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டீல் 8 (16) ஓட்டத்துடனும், ஹென்றி நிக்கோலஷ் டக்கவுட்டுனும், கேன் வில்லியம்சன் 27 (40) ஓட்டத்துடனும், ரோஷ் டெய்லர் 28 (42) ஓட்டத்துடனும், டொம் லெதம் 57 (65) ஓட்டத்துடனும், ஜேம்ஸ் நீஷம் 19 (27) ஓட்டத்துடனும், கிரேண்ட்ஹோம் 3 (13) ஓட்டத்துடனும், மிட்செல் சாண்டனர் 12 (30) ஓட்டத்துடனும், மாட் ஹென்றி 7 (13) ஓட்டத்துடனும், டிரெண்ட் போல்ட் 4 (7) ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், மாட் ஹென்றி 7 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் மார்க்வூட் 3 விக்கெட்டுக்களையும், டிரெண்ட் போல்ட், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளாங்கட், அடில் ரஷித் மற்றும் பென்ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்றாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதுடன், நியூஸிலாந்து அணியின் அரையிறுதி முடிவு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி-ICCLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *