கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு!


கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதி கரைச்சி வடக்கு கூட்டுறவு சங்கத்தின் பாழடைந்த மலசலகூடத்திலிருந்து ஒரு தொகை பயன்படுத்த முடியாத வெடிபொருட்கள் இன்று (07.06.2018) பகல்  மீட்கப்பட்டுள்ளது.
கரைச்சி வடக்கு கூட்டுறவு சங்கத்தின் வளாகத்தை செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாழடைந்த மலசலகூடத்தில் வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்த மக்கள் தருமபுரம் பொலிஸாரிடம் தெரியப்படுத்தினர் அதற்கமைவாக பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்களின் விபரங்கள் பின்வருமாறு! 12000 ரவுண்ஸ்கள், 04 ஆர்பீஜி செல்கள், 10 ஆகாஸ் குண்டுகள்,  05 கிளைமோர் குண்டுகள், 30 டொங்கன் செல்கள், 02 ஜக்கட்கள், 125 82-2 கைக்குண்டுகள், 10 ஆகாஸ் கைக்குண்டுகள், 17 கே 40, 06 எம் 75 கைக்குண்டுகள், 4 கிலோ சீ4, 550 அடி டேட கோட் வயர்கள்,  என்பன வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட வெடிபொருட்களை விசேட அதிரடிபடையினர் செயலிழக்க செய்யவுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *