FA கிண்ணத்தைக் கைப்பற்றுமா கிளிநொச்சி உருத்திரபுரம் அணி?


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த பருவ காலத்திற்கான FA கிண்ண சுற்றுப்போட்டியில், தேசிய ரீதியில் பங்கு பற்றிய உருத்திரபுரம் அணி, பங்குபற்றிய முதல் தடவையே 16 ஆவது சுற்று வரை முன்னேறியுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் புதன்கிழமை (10.10.2018) மாலை 3.30 மணியளவில் அனுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில்  FA கிண்ண காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் இடம்பெற இருக்கின்றது. நடைபெறும் ஆட்டம் ஒன்றில் கிளிநொச்சி உருத்திரபுரம் அணியை எதிர்த்து மாவனல்லை ஐக்கிய அணி மோதவுள்ளது.
மாவனல்லை  ஐக்கிய அணி, இலங்கை போக்குவரத்து சபை அணியையும், அதே போல் கிளிநொச்சி உருத்திரபுரம் அணி, புத்தளம் லிவர்பூல் அணியையும் வெற்றி கொண்டு இச்சுற்றுக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *