விரதங்களும் பலனும்!


சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும்.

விநாயக சதுர்த்தி விரதம் இருந்தால் வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும்.

வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்.

சஷ்டி விரதம் இருந்தால் மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும்.

கௌரி விரதம் இருந்தால் குறையாத செல்வமும் நீண்ட ஆயுளும் குழந்தைகளும் கிடைக்கும்.

வரலெஷ்மி விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். திருமணமான தம்பதியரிடையே நல் ஒற்றுமை நிலவும், திருமண உறவில் எந்த விரிசலும் இருக்காது.

பிரதோஷ விரதம் இருந்தால் மன அமைதி கிடைத்திடும், நீண்ட நல் ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும்.

மகா சிவராத்திரி விரதம் இருந்தால் சிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வைகாசி விசாக விரதம் இருந்தால்  குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர் என்று பொதுவாக நம்ப படுகிறது.

நவராத்திரி விரதம் இருந்தால் மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

கோகுலாஷ்டமி விரதம் இருந்தால், மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

அமாவாசை விரதம் இருந்தால் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.

பௌர்ணமி விரதம் இருந்தால் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.

கார்த்திகை விரதம் இருந்தால் எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.

 

நன்றி : ஒரு துளி இணையம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *