வைத்தியசாலையில் தீ விபத்து, அங்கிருந்த பணம் கொள்ளை


அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகக் கட்டடத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, அங்கிருந்த 63 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாதா நபரொருவர், வைத்தியசாலையின் பணப்பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிலிருந்த சில ஆவணங்களையும் சந்தேகநபர் தீமூட்டி கொளுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியவந்ததாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *