கண்டி- யட்டிநுவர வீதியிலுள்ள மாடிக் கட்டடத்தில் தீ


கண்டி- யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள 4 மாடிக் கட்டடத்தின், மூன்று மற்றும் நான்காம் மாடிகளில் இன்று காலை தீ பரவியுள்ளது.

இந்தநிலையில், தீ பரவிய கட்டடத்தில் சிக்கியிருந்த மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாக, கண்டி தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *