ஆரோக்கியமான கூந்தலுக்கான உணவுப் பழக்கங்கள்!


பண்டிகை காலம் என்றாலே கூந்தலை அதிகம் ஸ்டைல் செய்ய மற்றும் கூடுதல் மேக்கப் செய்து கொள்ள வேண்டிய காலமாகும்! ஆனால் பண்டிகைக்கு பிறகு கூந்தல் மற்றும் சருமத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் அதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். கூந்தலை டீடாக்ஸ் செய்வதன் மூலம் அதனை ஆரோக்கியமாக ஒருவர் வைத்துக் கொள்ள முடியும். பண்டிகை காலங்களில் கூடுதல் ஹேர் ஃபிக்சர், ஹீட்டிங் டாங்க்ஸ் மற்றும் ஹீட்டிங் செய்தல் அத்துடன் அதிக உஷ்ணம், தூசு மற்றும் மாசு ஆகியவற்றை கூந்தல் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனினும் இவை வெளிப்புற காரணிகள் மற்றும் ஒருவர் அருமையான கருங்கூந்தலை பெற சத்துணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்களது கூந்தலின் தரம் அதிகரிக்கும்.

முட்டை- முட்டைகளில் பையோட்டின் மற்றும் புரதம் அதிகமுள்ளது, இவை இரண்டும் முடி வளர்ச்சியை தூண்டி கூந்தலின் தரத்தை அதிகரிக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான புரதமான கெராடின் உற்பத்தி செய்ய பயோட்டின் அவசியமாகிறது. எனவே பயோட்டின் சப்ளிமெண்டுகள் கூந்தல் வளர்ச்சிக்காக சந்தையில் அதிகம் விற்கப்படுகின்றன.

கீரைகள் – பாப்பாய் எனர்ஜி வேண்டி கீரைகளை அதிகம் உண்பதை நாம் கார்டூனில் பார்த்திருக்கிறோம் இல்லையா. கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது என்றும் அது முடியுதிர்வுடன் தொடர்புடைய இரும்பு சத்து குறைபாட்டினை சரி செய்யக் கூடியது என்றும் உங்களுக்கு தெரியுமா? கீரைகளில் நன்மை பயக்கும் சத்துக்களான ஃபோலேட், இரும்பு மற்றும் விட்டமின் A மற்றும் C அதிகமுள்ளது இவை தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க கூடியவையாகும்.

விட்டமின் A சருமத்தில் செபம் சுரக்க உதவுகிறது. இதுவே ஸ்கேல்ப் இல் நீர்சத்து இருப்பதை உறுதி செய்து கூந்தலை ஆரோக்கியமுடன் வைத்திருக்கிறது.

மீன்- நீங்கள் மீன் உண்பவர் என்றால் மற்றும் கடற்கரையோரம் வசிப்பவர் என்றால், மீனை விட அதிக சத்து நிறைந்தது வேறு ஒன்றும் இல்லை. சால்மன், ஹெர்ரிங் மற்றும் மாக்கேரெல் ஆகிய புஷ்டியான மீன்களில் Iஅதிக சத்துக்கள் உள்ளன. மற்றும் அவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அடங்கியுள்ளது. இது தலை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது. கொழுப்பு நிறைந்த மீன்கள்களில் புரதம், செலேனியம், விட்டமின் D3 மற்றும் B விட்டமின் உள்ளன. இந்த சத்துக்கள் கூந்தலை உறுதியாகவும் ஆரோக்கியமுடனும் வைத்திருக்கும்.

பருப்புக்கள்- பருப்புகளில் விட்டமின் E, B, ஜிங்க் மற்றும் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்கள் அடங்கியுள்ளன. இவை உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியவையாகும். மேலும் இவற்றில் B விட்டமின்ஸ், ஜிங்க் மற்றும் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்களும் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு சத்தின் குறைபாடு ஏற்பட்டால் முடியுதிர்வு ஏற்படக்கூடும்.

விதைகள்- பருப்புகள், விதைகள் ஆகியவற்றில் விட்டமின் E மற்றும் இதர சத்துக்கள் அடங்கியியுள்ளன. சில விதைகளில் ஒமேகா-3 அடங்கியுள்ளதுஇது தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே ஃப்ளாக்ஸ் விதைகள், பூசணி விதைகள் ஆகியவற்றை உங்களது தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ள்வது அவசியம். பின்பு அதன் அருமையை நீங்களே உணர்வீர்கள். பருப்புகளில் இதர நன்மைகளும் உள்ளன. அது கார்டியோவேஸ்குலர் ஆரோக்கியம் மற்றும் வெக்கம் மற்றும் ஹைப்பர்டென்சன் ஆகியவற்றை குறைக்கிறது.

இந்த 5 விஷயங்களை உங்களது டயட்டில் சேர்த்துக் கொண்டு பின்பு ஏற்படும் மாற்றத்தை நீங்களே பாருங்கள். உங்களது கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும். இவற்றை உண்பதன் மூலம் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே பொறுமையுடன் கடைபிடியுங்கள்.

 

நன்றி : m.dailyhunt.in

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *