பதுரியன்ஸ் பாஷ் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி!


மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கிடையிலான புட்சல் கால்பந்து போட்டி பதுரியா மத்திய கல்லூரி மைதானத்தில் இரண்டு நாட்களாக அதாவது கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்றது.

லீக் முறையில் நடைபெற்ற இந்த புட்சல் தொடரில் 33 அணிகள் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியானது 25 வயதுக்கு கீழ், 25 முதல் 35 வயதெல்லையின்னர், 35 வயதுக்கு மேல் என்ற அடிப்படையில் இடம்பெற்றது.

இதில் மூன்று குழுக்களிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன்ஸ், ரன்னர்-அப் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் 25 வயதிற்கு கீழ் பிரிவில் “குழு 84” அணி சாம்பியன் ஆகவும், “குழு 87” அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் கோப்பையை வென்றனர்.

25 முதல் 35 வயது வரை பிரிவில் “குழு 78” அணி சாம்பியன் ஆகவும் “குழு 80” அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் கிண்ணங்களை சுவீகரித்தனர். 35 வயதுக்கு மேல் பிரிவில் “ஓர்கிட் அணி” சாம்பியன் ஆகவும் “குழு 64” அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் வெற்றி பெற்றது.

இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முறையே, திரு.நப்ரின் தாஹிர், திரு.சப்ராஸ், திரு.அஸ்மி ரஷீத் ஆகியோர் சிறந்த வீரர்களாக தெரிவுசெய்யப்பட்டு பதக்கங்களை வென்றனர்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *