மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 24 | மு. நியாஸ் அகமது


.தி.மு.க-வில், நால்வர் அணி என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்? ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி. இவர்களைத்தானே…? இவர்கள்தானே கட்சியின் துவார பாலகர்களாக…  அதிகாரம் பொருந்தியவர்களாக… கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக இருந்தார்கள். இப்போது, அந்த நால்வர் அணியும் இல்லை; அந்த நால்வரில் நடுநாயகமாக இருந்த நத்தம் விசுவநாதன், இப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லை என்பது வேறு கதை. சரி, விஷயத்துக்கு வருவோம். இதுபோல மூவர் அணி ஜெயலலிதா கட்சியைக் கைப்பற்றி, அனைத்து அதிகாரங்களையும் தனதாக்கிக்கொண்ட போதும் அமைக்கப்பட்டது. ஆனால், இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அது, ஜெயலலிதா அமைத்த அணி அல்ல… அவர்களே அமைத்துக்கொண்ட அணி.

ஆம், ஜெயலலிதாவிடம் கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த  பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் அமைத்த அணி அது. இந்த மூவரும் வயதிலும், அரசியல் அனுபவத்திலும் ஜெயலலிதாவைவிட மூத்தவர்கள்; அரசியலின் அத்தனை சூட்சமத்தையும் அறிந்தவர்கள்; பழம் தின்று கொட்டை போட்டவர்கள். இவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சியின் தொண்டர்களை வைத்தே ஓரங்கட்டினார் ஜெயலலிதா. இறுதியில், ஜெயலலிதாவை எதிர்க்க முடியாமல் அந்த மூவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக அரசியலில் கரை ஒதுங்கினார்கள்.  திருநாவுக்கரசு, காங்கிரஸில் அடைக்கலம் புக… பண்ருட்டி ராமச்சந்திரன் பா.ம.க., தே.மு.தி.க என ஒரு சுற்று அடித்துவிட்டு மீண்டும் அ.தி.மு.க-வில் தஞ்சமாக, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தி.மு.க-வைத் தழுவிக்கொண்டார்.

ஹூம். அரசியலை சதுரங்கம் என்பார்கள். ஆனால், அது எவ்வளவு தவறான உவமை? சதுரங்கத்தில் எப்போதும் எந்தச் சிப்பாயும், மந்திரியும் அணி மாறமாட்டார்கள்… தங்கள் ராஜாவுக்கு, ராணிக்கு எதிராகத் திரும்பமாட்டார்கள். ஆனால், இங்கு எப்போது என்ன வேண்டுமானாலும் நிகழும்!

‘கரம் கோத்த அ.தி.மு.க. – காங்கிரஸ்!’

சரி. சென்ற அத்தியாயத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். எம்.ஜி.ஆருக்கும் ராஜிவ் காந்திக்கும் இருந்த நட்பு, இயல்பாகவே காங்கிரஸையும், அ.தி.மு.க-வையும் கரம்கோக்க வைத்தது. சட்டமன்றத்தில் இரு கட்சிகளும் இணைந்தே செயல்பட்டன. 1989 நாடாளுமன்றத் தேர்தலில், இந்த நட்பு கூட்டணியாக மலர்ந்தது. அ.தி.மு.க-வை கைப்பற்றிய பின் ஜெயலலிதா சந்திக்கும் முதல் தேர்தல். ஒரு பெரும் வெற்றியை அ.தி.மு.க தொண்டர்களுக்குக் காட்டியாக வேண்டும். அப்போதுதான், கட்சி உயிர்ப்புடன் இருக்கும். இதை, ஜெயலலிதா நன்கு உணர்ந்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் இடைவிடாது பிரசாரம் செய்தார். ஜெயலலிதா, சட்டமன்றத்திலிருந்து கண்ணீருடன் வெளியே வந்தார் அல்லவா…? அது மிகப்பெரிய அனுதாப அலையை உண்டாக்கி இருந்தது. சென்ற இடமெல்லாம் கூட்டம்… அதுவும் குறிப்பாக பெண்கள்.

இப்போது, கட்சிக்குள் ஜெயலலிதாவுடம் மனவருத்தத்தில் இருந்த சில சீனியர்களுக்கு புரியத் தொடங்குகிறது.  எம்.ஜி.ஆருக்குப் பின் அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான், கூட்டத்தை ஈர்க்கும் கரிஷ்மா இருக்கிறதென்று; அவரால் மட்டும்தான் எம்.ஜி.ஆர் உருவாக்கி வைத்துச் சென்ற ஓட்டு வங்கியைக் காக்க முடியுமென்று. கூட்டைவிட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் கூடு திரும்பத் தொடங்குகிறார்கள்.

அந்தத் தேர்தலில் ஓர் இடத்தைத் தவிர, மற்ற இடங்களில் காங்கிரஸ் – அ.தி.மு.க கூட்டணிக்கே வெற்றி. ஆம், பிரமாண்ட வெற்றிதான். அந்த ஓர் இடத்தையும் சி.பி.ஐ கைப்பற்றி இருந்தது. தி.மு.க படுதோல்வி. இதைக் கொஞ்சம்கூட கருணாநிதி எதிர்பார்க்கவில்லை. அதுபோல ஜெயலலிதா எதிர்பார்க்காத சம்பவமும் மத்தியில் நிகழ்ந்தது. தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி இருந்தாலும், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இல்லை. ஜனதா தளம் ஆட்சி அமைக்கிறது. கருணாநிதியின் நண்பர் வி.பி.சிங் பிரதமராகிறார்.

 

‘என்னைக் கொல்ல சதி!’

நாடாளுமன்றத் தேர்தல் தந்த வெற்றி, காங்கிரஸையும், அ.தி.மு.க-வையும் இன்னும் நெருக்கமாக்குகிறது.  பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடர்கிறது. அது, பிப்ரவரி 24-ம் தேதி அதிகாலை. இந்தக் கூட்டணிக்காகப் பிரசாரம் செய்துவிட்டு, பாண்டிச்சேரியிலிருந்து ஜெயலலிதா காரில் திரும்பிக் கொண்டிருக்கிறார். உடன் சசிகலாவும். அவர்கள் மீனம்பாக்கத்தைக் கடக்கும்போது, அவர்கள் கார் மீது ஒரு லாரி மோதுகிறது. ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் பலத்த காயம். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஜெயலலிதாவை நலம் விசாரிக்க, ராஜிவ் மருத்துவமனைக்கு வருகிறார். ஜெயலலிதா அவரிடம், “என்னைக் கொல்ல சதி நடக்கிறது” என்கிறார். பின், அதை ஓர் அறிக்கையாகவும் வெளியிடுகிறார்.  தமிழக அரசியலில் பெரும் புயல் வீசத் தொடங்குகிறது. அந்தப் புயலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிடுகிறார். ஆம், அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிறார் ஜெயலலிதா…!

தமிழகத்தில் இவ்வாறு புயல்கள் வீசிக்கொண்டிருக்க… மத்தியிலும் சீதோஷ்ண நிலை சரியில்லை. ஆம், மண்டல் கமிஷன் அறிக்கை, அத்வானி ரதயாத்திரை என மத்தியில் சூழல் நிலையற்றதாக இருக்கிறது. வி.பி.சிங் அரசு கலைக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் ஆட்சி அமைக்கிறார்.

நாடாளுமன்ற படுதோல்வியின்போதுகூட அதிகம் கவலைகொள்ளாத கருணாநிதிக்கு, இப்போது கவலை ரேகை கொஞ்சம் கொஞ்சமாகப் படர்கிறது. காங்கிரஸ் ஆதரவுடன் மத்தியில் ஓர் ஆட்சி… அது நிச்சயம் தனக்கு எதிராகத்தான் இருக்கும் என்பதை நம்புகிறார். அவர் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆம். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உறவு சுமுகமாக இல்லை.

தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து வந்த காலம் அது. அந்தச் சமயத்தில், இலங்கையிலிருந்து சர்வசாதாரணமாகப் போராளிகள் வந்து சென்றுகொண்டிருந்தனர். தமிழகத்தில் அவர்களின் நடமாட்டம் அதிகமாகிறது. அது மாதிரியான சமயத்தில் காங்கிரஸே யோசிக்காத ஒரு விஷயத்தை ஜெயலலிதா செய்கிறார். போராளிகளின் ஊடுருவலைத் தடுப்பதில், கருணாநிதி அரசுக்குக் கொஞ்சமும் அக்கறையில்லை என்று ஒரு பெரிய புகார் பட்டியலை பிரதமரிடம் கொடுக்கிறார். எம்.ஜி.ஆருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இருந்த நெருக்கத்தைப் பற்றியெல்லாம் அவர் கவலைகொள்ளவில்லை. ஜெயலலிதாவின் நோக்கம், இதைக் காரணமாகவைத்து கருணாநிதி அரசைக் கலைப்பது. புகார் கொடுத்ததோடு நிற்கவில்லை… தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தினம் ஓர் அறிக்கைவிடுகிறார். ராஜிவ் காந்தி மூலமாக பிரதமருக்கு அழுத்தம் தருகிறார்.

இறுதியில், ஜெயலலிதா வெற்றி பெறுகிறார். ஆம், கருணாநிதி ஆட்சி கலைக்கப்படுகிறது. 12 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர், இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை இழக்கிறார். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருகிறது.

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-21-08-17-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-01-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-08-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + twenty =