மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 25 | மு. நியாஸ் அகமது


 

எம்.ஜி.ஆர் இறந்த பின், ஜெயலலிதா அ.தி.மு.க-வை கைப்பற்றியிருந்த நேரம். அந்தச் சமயத்தில், ஒரு ஆங்கில இதழ் அவரைப் பேட்டி காண்கிறது. “தமிழகத்தில் சில ஆண்டுகளாக சினிமா சார்ந்த அரசியல் இருப்பதாக ஒரு பிம்பம் இருக்கிறது. அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்களும் திரைத்துறையிலிருந்து வந்து இருக்கிறீர்கள்?” என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ஜெயலலிதா கொஞ்சம் கோபமாக, “மக்கள் என்னை இன்னும் நடிகையாகக் கருதுவதை நீங்கள் பார்த்தீர்களா? நான் அரசியலில் வெகு காலமாக இருக்கிறேன். மக்கள் என்னை அரசியல்வாதியாகத்தான் பார்க்கிறார்கள். யாரும் என்னை நடிகையாக நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் என்னை அவர்களுடைய அம்மாவாக, அக்காவாக, மகளாகத்தான் நினைக்கிறார்கள். நீங்கள்தான் வேண்டுமென்றே… இன்னும் என்னை நடிகையாக நினைவில் வைத்திருக்கிறீர்கள்” என்றார்.

 

ஆம், உண்மைதான். சினிமாவைத் தாண்டி ஒரு பிம்பம் அவருக்கு இருந்தது. அதற்காக அவரும் கடுமையாக உழைத்தார். மேடைப் பேச்சுகள், புள்ளி விபரங்கள் எல்லாவற்றையும் கடந்து, அரசியலுக்கு ஏற்றவாறு தன்னை முழுவதுமாகத்  தகவமைத்துக் கொண்டார்.  மக்கள் கூடுவார்கள் என்பதற்காக மட்டுமே அவரை, கூட்டங்களுக்கு அனுப்பவில்லை எம்.ஜி.ஆர். விபரங்களுடன் கூடிய ஜெயலலிதாவின் பேச்சும் அதற்கொரு காரணம். எம்.ஜி.ஆருக்குப் பின் முழுவதுமாகக் கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடக்கத்திலிருந்தே காய்களை நகர்த்தினாரா? என்று தெரியாது. ஆனால், அவர் அ.தி.மு.க-வில் சேர்ந்ததிலிருந்தே அரசியலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பெரிய பொறுப்புகளும், வாய்ப்புகளும் வேண்டுமானால் அவருக்கு எளிதாக வந்திருக்கலாம். ஆனால், அதற்கு ஏற்றவாறு  தன்னை தகுதிப்படுத்திக்கொண்டார்.

‘மீண்டும் தேர்தல், மீண்டும் பிரசாரம்’

‘தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது; சென்ற அத்தியாயத்தை அங்குதானே முடித்திருந்தோம்.  சரி வாருங்கள்… அங்கிருந்து தொடர்வோம்…

ஆட்சி கலைக்கப்பட்ட சில மாதங்களில் அடுத்த தேர்தல் அறிவிக்கப்படுகிறது. ஆட்சி கலைக்கப்பட்டாலும், தி.மு.க-வினர் ஒருவித உற்சாகத்தில்தான் இருந்தனர். “தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. இது அராஜகம். இதனால் நமக்கு ஆதரவாக மிகப் பெரிய அனுதாப அலை வீசும். நாம் சுலபமாக ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம்” என்று தி.மு.க-வினர் நினைத்தனர். ஆனால், ஜெயலலிதா அது குறித்தெல்லாம் கவலை கொள்ளவில்லை. அவரின் எண்ணம் வேறுவிதமாக இருந்தது,  “வாய்ப்புக்காக ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், இரண்டு ஆண்டுகளிலேயே அந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இதனை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று நினைத்தார். அதற்காகக் காய்களை மிகச் சரியாக நகர்த்தினார்.  தனக்கு அடங்கி நடக்கும் வேட்பாளர்களாகப் பார்த்து தேர்வு செய்தார். நிறையப் புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்தார்.

1991 ஏப்ரல் 21-ல் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரம் தொடங்கியது. செங்கல்பட்டில் பிரசாரத்தைத் தொடங்கி, தமிழகமெங்கும் சுற்றி சென்னையில் பிரசாரத்தை முடிப்பதாகத் திட்டம். இப்போது மாதிரி ஆகாய மார்க்கமாக, ஹெலிகாப்டரில்  பறந்து பறந்து எல்லாம் பிரசாரம் இல்லை. முழுக்க முழுக்க வேனில் தான். செங்கல்பட்டில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பிரசாரத்தைத் தொடங்கினார். அவர் வேனிலிருந்து பிரசாரம் செய்ய, வேனுக்கு அருகே ஒரு ஸ்டூல் போடப்பட்டது. அதில் வேட்பாளர்கள் நின்று கொண்டார்கள். இப்படியாக அவர்  பிரசாரம் ஆரம்பமானது.

வழக்கம்போல் அப்போதும் காங்கிரஸில் கோஷ்டி பூசல்… வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தார்கள். அது குறித்தெல்லாம் அவர் கவலைப்படவில்லை. ‘கைச் சின்னத்துக்கு வாக்கு அளியுங்கள்’ என்று வேட்பாளர் இல்லாமலேயே பிரசாரம் செய்தார்.  அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்றார். மற்ற வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி இருந்ததால், தான் போட்டியிட்ட பர்கூருக்கு மட்டும் அவரால் செல்ல முடியவில்லை. அது குறித்து அவர் கவலை கொள்ளவும் இல்லை. மக்கள் தன்னைக் கைவிடமாட்டார்கள் என்று நம்பினார்.

1991 மே 21, இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். தர்மபுரி சுற்றுவட்டாரத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு, விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க வந்தார். பிரசாரத்தில் மக்கள் தனக்கு அளித்த வரவேற்பு, அடுத்தக் கட்ட நகர்வு என நிர்வாகிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த செய்தி அவருக்கு வந்து சேர்கிறது.  ஒரு நிமிஷம் உறைந்தே போனார். அதிர்ச்சியில்  உறைந்த வார்த்தைகளை உயிர்ப்பித்து மீண்டும் கேட்கிறார். மீண்டும் சொல்லப்படுகிறது “ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டுவிட்டார்”

“ஜெயலலிதா என்கிற நான்…”

ஆட்சியைக் கலைத்ததால், அனுதாபம் இருக்கும்; சுலபமாக வென்றுவிடலாம் என்று தொடக்கத்தில் தி.மு.க-வினர் நினைத்தனர். ஆனால், காட்சி மாறியது ராஜீவ் மரணம், அளப்பரிய அளவில், தமிழகத்தில் அனுதாப அலையை உண்டாக்கி இருந்தது. அ.தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. மாபெரும் வெற்றி. தி.மு.க கூட்டணிக்கு வெறும் 7 இடங்கள்தான். அதிலும் தி.மு.க 2 தொகுதிகளில்தான் வெற்றி பெற்று இருந்தது. அ.தி.மு.க-வுக்கு 225 தொகுதிகள். இது ஜெயலலிதாவே எதிர்பார்க்காத வெற்றி.  தமிழகத்தின் இளம் முதல்வராக சேலைக்கு மேல் ஒரு அங்கி அணிந்து, 1991, ஜூலை 24-ம் தேதி, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.  அந்தக் காலக்கட்டத்தில் திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பதவியேற்கும்போது,  ‘உளமாற’ உறுதி கூறித்தான் பதவியேற்பார்கள். ஆனால், ஜெயலலிதா ஆண்டவனின் பெயரால் உறுதிமொழி எடுத்தார்.

பதவிப் பிரமாணமெல்லாம் முடிந்து, அவர் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கிளம்பத் தயாரானபோது… சட்டமன்றத்துக்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ஜெயலலிதாவின் கால்களில் விழுகிறார். அவர் விழுந்த மறுகணமே வரிசையாக மற்ற அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தரையில் சாஷ்டாங்கமாக சரிகிறார்கள். தமிழக அரசியலில் ஒரு புது கலாசாரத்தை ஏற்படுத்திய அந்த இளைஞர்,  வேறு யாருமில்லை… ஜெயலலிதா பிரசாரத்தின் ஜி.பி.எஸ்-ஸாக இருந்து, அமைச்சர் பொறுப்பு வகித்து, இப்போது கட்சியிலிருந்து கட்டம்கட்டப்பட்டு வைத்திருக்கும், ‘செங்கோட்டையன்’தான் அவர்!

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-21-08-17-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-01-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-08-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-23-09-21-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =