மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 33 | மு. நியாஸ் அகமது


ருமபுரி வாச்சாத்தி மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகள் சொல்வார்கள், “நீங்கள் மட்டும்தான். ஆம், நீங்கள் மட்டும்தான், உங்களுக்கு சரியான கூட்டணி. உங்களுக்கு நீங்கள் மிக உண்மையாக இருங்கள். உங்களை அதிகமாக நம்புங்கள்” என்பார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தான், 1992-ம் ஆண்டு வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மீது வனத்துறையினர், காவல்துறையினர் இணைந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். ஒருவேளை அந்த காவல்துறை அதிகாரிகள், ஜெயலலிதாவிடம் சொன்னார்களா என்று தெரியவில்லை…. ஜெயலலிதா எப்போதும் தாம் அமைத்த கூட்டணியை, அதன் தலைவர்களை நம்பியதைவிட தன்னை நம்பினார். ஆம், தன்னை மட்டுமே நம்பினார். தன்னை நம்பியதுடன் நின்றிருந்தால் பரவாயில்லை. கூட்டணித் தலைவர்களை அவமதித்தார். ஜெயலலிதாவின் இந்த போக்கால், கோபத்தில் இருந்த கூட்டணித் தலைவர்கள், அவரை வீழ்த்துவதற்காக சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருந்தார்கள். அப்படியான சந்தர்ப்பம் மிகவிரைவில அமைந்தது.

“ஓ. பன்னீர்செல்வம் ஆகிய நான்…”

 

 

அவர்  பயந்தது போன்றே ஒரு தீர்ப்பை செப்டம்பர் 21, 2001 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதுதான் அந்த தீர்ப்பு, “மே 14, 2001 தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அவர் பொறுப்பேற்றது செல்லாது” என்றது. ஜெயலலிதா உடனடியாக அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை போயஸ் கார்டனில் கூட்டினார். விவாதித்தார்…. இல்லை, இல்லை… அவர் மட்டுமே பேசினார். பின் அங்கிருந்து புறப்பட்டு, தன் வாகனத்தில் ஆளுநர் மாளிகை சென்றார். இப்போது அவர் வாகனத்தில் தேசியக் கொடி இல்லை. அ.தி.மு.க கொடி மட்டுமே இருந்தது. வாகனத்தை பார்த்தவர்களுக்கு புரிந்து விட்டது. கவர்னரிடம் சூழ்நிலையை விளக்கினார். அதன்பின், மாலையில் ஆளுநரை அமைச்சர்கள் சந்தித்தார்கள். எம்.ஜி.ஆர் ரசிகனாக பெரியகுளம் பகுதியில் சிறு தேநீர்கடை நடத்தி, பின் அ.தி.மு.கவில் இணைந்து,  ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய மனிதராக மாறி, அமைச்சராக உயர்ந்த ஓ. பன்னீர்செல்வம், இப்போது முதல்வராக உயர்த்தப்பட்டார். விவிலியத்தில் ஒரு வசனம் வரும்…“தன்னை தாழ்த்திக் கொள்பவனே உயர்த்தப்படுவான்” என்று.

இது பன்னீர்செல்வத்துக்கு மிகச்சரியாக பொருந்தியது. முதல்வராக உயர்த்தப்பட்ட போதும் அமைதி காத்தார். முதல்வர் நாற்காலியிலும் அசெளகர்யமாக அமர்ந்தார். அவருக்கு நன்கு தெரியும்… இதுஎல்லாம் சில காலம்தான் என்று.

“போயஸ் தோட்டத்தில்தான் தலைமைச் செயலகம் செயல்படுகிறது… ஜெயலலிதாவின் அனுமதி பெற்ற பின்பே, அனைத்து கோப்புகளிலும் பன்னீர்செல்வம் கையெழுத்திடுகிறார்…” என்று முணுமுணுக்கப்பட்டது. ஊடகங்கள் எழுதின… இதுகுறித்து பன்னீர்செல்வம் சிறிதும் கவலைப்படவில்லை. அப்போது அவர் கவலையெல்லாம் வேறொன்றின் மீது இருந்தது. ஆம், டான்சி வழக்கு உயர் நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. அவர் கவலையெல்லாம்… ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்பது மட்டும்தான். ஜெயலலிதாவே இந்த அளவுக்கு தீர்ப்பு குறித்து கவலைப்பட்டிருப்பாரா..? என்று தெரியாது. ஆனால், அப்போது தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் கவலைப்பட்டார். எல்லா சாமியையும் வேண்டினார். அவர் வேண்டுதல் வீண் போகவில்லை. ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதாவும் விடுதலையானார். முதல்வர் பதவியிலிருந்து பன்னீர்செல்வமும் விடுதலையானார்.

“ஜெயாவாக திரும்பி வருதல்”

மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பொறுபேற்றார். பழைய பன்னீர்செல்வமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சர் பொறுபேற்க… பழைய ஜெயலலிதாவாகவே திரும்பி வந்தார். ஆம், தீர்ப்பு, சில காலம் முதல்வராக இல்லாதது… இது எதுவும் அவர் ஆளுமையை சிதைக்கவில்லை. அப்படியே திரும்பி வந்தார். மீண்டும் அனைத்து தரப்பு மக்களின் பகையைச் சம்பாதித்துக் கொண்டார்.  ராணி மேரி கல்லூரியின் ஒருபகுதியை இடித்துவிட்டு புதிய சட்டப்பேரவை கட்டுவேன் என்றது… கோயில்களில் ஆடு கோழி பலியிடத் தடை…  கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், எஸ்மா சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்தது… பொடா சட்டத்தில் வைகோவை கைது செய்தது என அனைத்து தரப்பு மக்களும், கட்சிகளும் ஓரணியில் திரள, இவரே காரணமானார்… ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை… எதிர்த்து எழுதிய அத்தனை பேர் மீதும் அவதூறு வழக்கு போட்டார்.

அனைத்து கட்சிகளும் கரம் கோர்த்தன. தங்களது சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தது. எதனையும் பொருட்படுத்தாமல் முன்னோக்கி சென்று கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு, ஒரு பின்னடைவு காத்திருந்தது. தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கை தமிழ்நாட்டை விட்டு வெளியே கர்நாடகத்தில் நடத்த உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் நடந்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது… சாட்சிகள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று தான் இவ்வழக்கை தொடர்ந்திருந்தார் அன்பழகன். இப்படியாக தீர்ப்பு வரும் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கவில்லை…. மீண்டும் ஜெயலலிதா எதிர்பார்க்காதது அல்லது அவருக்கு நடக்கக் கூடாது என்று எல்லாம் நடக்கத் துவங்கியது.

கருணாநிதி ஒரு மெகா கூட்டணியை அமைத்தார்… காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் என வலுவான கூட்டணி அது. அதற்கு சில நாட்களுக்கு முன் பத்தொன்பது மாதங்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வந்த வைகோவும் தமிழகமெங்கும் நடைப் பயணம் சென்று ஜெயலலிதாவுக்கு எதிராக பிரசாரம் செய்தார்.

கூட்டணி பலம், தேர்தல் பிரசாரம்… இதையெல்லாம் தாண்டி மக்களிடம் சம்பாதித்த அதிருப்தி என எல்லாம் ஜெயலலிதாவுக்கு எதிராக திரும்பியது. அ.தி.மு.க கூட்டணி 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இது என்றுமே ஜெயலலிதா நினைவுகூர விரும்பாத தோல்வி… ஒரு நேர்காணலில் இதை நினைவுபடுத்தியதற்காகத் தான் ஊடகவியலாளர் கரண் தபாரிடம் கோபப்பட்டார் ஜெயலலிதா. ”இது ஒன்றும் மகிழ்ச்சி தரக்கூடிய பேட்டியாக எனக்கு அமையவில்லை.” என்றார்.

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-21-08-17-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-01-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-08-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-23-09-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-25-09-30-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-27-10-17-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-28-11-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-29-11-14-17/

http://www.vanakkamlondon.com/httpwww-vanakkamlondon-comfrom-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-30-11-29-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-31-12-08-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-32-12-19-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *