மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 35 | மு. நியாஸ் அகமது


தோல்வி எப்போது தோல்வியாகிறது என்றால், நாம் அந்த தோல்வியிலிருந்து எதுவும் கற்காதபோதுதான்’ என்பார் குத்துச்சண்டை வீரர் ரெனன். ஜெயலலிதா கடந்த நாடாளுமன்றத் தோல்வியிலிருந்து அனைத்தையும் நன்கு கற்றிருந்தார். முக்கியமாக, ‘இனி வலுவான கூட்டணி இல்லாமல் எதுவும் செய்யமுடியாது’ என்பதை..! தன் கூட்டணி வாகனத்திலிருந்து பா.ஜ.க-வை இறக்கிவிட்டு… பிற கட்சிகளுக்காக இருக்கைகளை வைத்திருந்தார். ம.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஹாஸ்யங்கள் உலாவின. சரத்குமாரும் அ.தி.மு.க வாகனத்தில் ஏறுவார் என்று முணுமுணுக்கப்பட்டது.

அந்த சமயத்தில்தான் தி.மு.க மாநாடு திருச்சியில் ஒருங்கிணைக்கப்பட்டது. அது தி.மு.க மாநாடாக மட்டுமில்லாமல், கூட்டணிக் கட்சிகளின் மாநாடாக இருந்தது. எப்படி கருணாநிதிக்கு ஆளுயர  பதாகை வைக்கப்பட்டதோ… அதே போல வைகோ உட்பட பிற கூட்டணித் தலைவர்களுக்கும் வைக்கப்பட்டது. மாநாடு துவக்க நாளன்று, ‘தி.மு.க-வில் தான் கேட்ட இடங்கள் கிடைக்காததால்,  அ.தி.மு.க கூட்டணிக்கு வைகோ செல்வது உறுதியாகிவிட்டது’ என ஊடகங்கள் எழுதின. ஆனால், இதை மூன்று தரப்பும் உறுதி செய்யாமல், அமைதி காத்தது.

‘பிரிந்த வைகோ… சேர்ந்த சரத்குமார்… தனியன் விஜயகாந்த்’

மாநாட்டுக்காக திருச்சிக்கு வந்த கருணாநிதியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டார்கள். அவர் கோபமாக, “இவ்வளவுதான் ஒதுக்க முடியும். அவர் செல்வதாக இருந்தால் செல்லட்டும்” என்ற தொனியில் பேசிவிட்டார். உடனடியாக வைகோவுக்கு இந்தத் தகவலை ம,தி.மு.க-வினர் எடுத்துக் கூறினர். அதுவரையிலும் அ.தி.மு.க-வுடன் திரைமறைவாக மேற்கொள்ளப்பட்ட கூட்டணி பேரங்கள், இதன்பின் வெளிப்படையாக  நடைபெறத் தொடங்கியது. 19 மாதங்கள் ஜெயலலிதா தன்னை பொடா சட்டத்தின் கீழ் சிறையில் வைத்ததையெல்லாம் மறந்துவிட்டு, அவருடன் இன்முகத்துடன் கைகுலுக்கினார் வைகோ. தி.மு.க மாநாட்டின் கடைசி நாளன்று அங்கு வைக்கப்பட்டிருந்த வைகோ பதாகைகள் கொளுத்தப்பட்டன.

 

இது பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது, சரத்குமாரின் நிலைப்பாடு. தி.மு.க மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய சரத்குமார், “நான் இறந்தால் என் மீது தி.மு.க கொடிதான் போர்த்தப்பட வேண்டும்” என்று மிக உருக்கமாக உரையாற்றினார். கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் அனைவரும் கண்கலங்கித்தான் போனார்கள். ஆனால், அடுத்த சில தினங்களில் சரத்குமார் எடுத்த முடிவு அதிரடியானது. ஆம், வைகோவாவது கூட்டணிதான் வைத்தார். சரத்குமார் கட்சியிலேயே இணைந்துவிட்டார். ஜெயலலிதாவை  ராதிகாவுடன் சென்று சந்தித்து அ.தி.மு.க-வின் உறுப்பினர் அட்டையைப் பெற்றார். ராதிகாவுக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இப்போது அ.தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க என இரண்டு பிரதான கட்சிகள். மேலும் பிரசாரம் செய்ய நட்சத்திரங்கள். தி.மு.க கூட்டணி அளவுக்கு வலுவான கூட்டணி இல்லாவிட்டாலும் மோசம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு கூட்டணி இருந்தது. எம்.ஜி.ஆர் உண்டாக்கி வைத்திருந்த அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியும் உடன் இருக்கிறது.

ஹூம்… இந்தத் தேர்தலில் இன்னொரு கட்சியும் புதிதாக களத்தில் இறங்கியது. ஆம், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் விஜயகாந்த் தொடங்கிய தே.மு.தி.க-வும் இப்போது களத்தில்.  “தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு நாங்கள்தான் மாற்று. மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டும்தான் கூட்டணி” என்று சொல்லிவிட்டு அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை போட்டுவிட்டு, அவரும் பிரசாரத்தை முடுக்கிவிட்டார்.இப்படியாகத் தேர்தல் பிரசாரம் தொடங்கியது. இவர்கள் கொப்பளித்த வார்த்தைகளின் உஷ்ணத்தில் களம் சூடாகியது.

கருணாநிதியின் ‘இலவச அஸ்திரம்’

 

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இருந்த எந்த மோசமான பிம்பமும் இப்போது ஜெயலலிதாவுக்கு இல்லை. ‘கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை மாறுபட்டாலும் ஏறத்தாழ ஒரே பலத்துடன்தான் தேர்தலை சந்திக்கப்போகிறோம்’ என்பதை உணரத் தொடங்கினார் கருணாநிதி. ஆக, ஜெயலலிதாவை வீழ்த்த  கூட்டணி மட்டும் போதாது. வேறு அஸ்திரங்களும் தேவை என்று எண்ணிய கருணாநிதி வடிவமைத்ததுதான்…  ‘இலவச அஸ்திரம்’! ஆம், ‘இரண்டு ரூபாய்க்கு அரிசி, இலவசத் தொலைக்காட்சி, இரண்டு ஏக்கர் நிலம், கேஸ் இணைப்பு’ என அவரின் தேர்தல் அறிக்கை இலவசங்களால் நிரம்பி வழிந்தது. அ.தி.மு.க கூட்டணி கொஞ்சம் ஆடித்தான் போனது.  சென்ற சட்டமன்றத் தேர்தலில், ‘தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது. என் இருப்பை இல்லாமல் செய்யப்பார்க்கிறார் கருணாநிதி… பொய் வழக்கு போடுகிறார்’ என்று தன்னைச் சுற்றியே பிரசாரத்தை வடிவமைத்த ஜெயலலிதா இந்தத் தேர்தலில் அப்படிச் சொல்லமுடியாது. எனவே, அவரும் சில இலவசங்களை வழங்குவதாகச் சொன்னார்.

 

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால், இலவசக் கணினி வழங்கப்படும் என்றார்.  தொலைக்காட்சிக்கு முன்னால் கணிப்பொறி எடுபடவில்லை.  அ.தி.மு.க தோல்வியைச் சந்தித்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் அளவுக்கு படுமோசமான தோல்வி அல்ல… கவுரவமான தோல்விதான்! அ.தி.மு.க 61 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணி பலம்… இலவசம் என எல்லாம் இருந்தும் தி.மு.க-வால் தனிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.  கூட்டணிக் கட்சிகள் துணையுடன் தி.மு.க ஆட்சி அமைத்தது.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தே.மு.தி.க 8 சதவிகித வாக்குகளைப் பெற்று இருந்தது. அந்த கட்சியிலிருந்து விஜயகாந்த் மட்டும் சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இப்போது தி.மு.க ஆட்சி! அ.தி.மு.க  வலுவான எதிர்க்கட்சி. எப்படியாவது கூட்டணி ஆட்சி அமைத்துவிடலாம் என்று நினைத்தக் காங்கிரஸ், கடைசி நேரத்தில், கூட்டணி மாறிய ம.தி.மு.க, விஜயகாந்த் வரவால் தன் வாக்கு வங்கியில் சேதமடைந்திருந்த பா.ம.க, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் முதன்முதலாக சட்டமன்றத்துக்குள் தே.மு.தி.க என பி.ஜே.பி தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் இப்போது சட்டப்பேரவையில். அடுத்தடுத்து காட்சிகள் அரங்கேறத் தொடங்கின…

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-21-08-17-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-01-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-08-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-23-09-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-25-09-30-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-27-10-17-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-28-11-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-29-11-14-17/

http://www.vanakkamlondon.com/httpwww-vanakkamlondon-comfrom-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-30-11-29-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-31-12-08-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-32-12-19-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-33-01-04-18/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-34-01-11-18/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *